உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தமிழ் வளம் பொருளீட்டுவது ஒருவரின் தனியுரிமையே. ஆயின், தமிழைக் கெடுத்துப் பொருளீட்டுவது ஒருவர்க்கும் உரிமை யன்று. தன்னலத்தார் எத்தகைக் கட்புல வுண்மையையும் மறுக்க அஞ்சார் என்பதை, நேர்நின்று.

காக்கை வெளிதென் பார் என்சொலார் தாய்க்கொலை

சால்புடைத் தென்பாரு

முண்டு.

என்னும் குமரகுருபர அடிகள் கூற்றுக்காட்டும், பொதுமறை கண்ட பொய்யா மொழியாரோ, உலகறிந்த உண்மையை மறுப்பாரை,

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்."

என்று வன்மையாகக் கடிந்தார்.

(குறள். 850)

பண்டைப் பாண்டிநாட்டு முக்கழக வுண்மையை, மறைமலை யடிகள், ந. மு. வேங்கடசாமியார், பண்டிதமணி கதிரேசர், சோமசுந்தர பாரதியார் முதலி யோர் மட்டுமன்றி; உ. வே. சாமிநாதர், இரா. இராகவனார் (ஐயங்கார்), மு. இராக வனார் (ஐயங்கார்), முதலியோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சென்ற சிலை மாதம் 17ஆம் பக்கல் தஞ்சையில் நடைபெற்ற தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாட்டில், இற்றைத் தமிழ்ப்புலவருள் நடுநாயகமாக விளங்கும் மாணிக்கம் போன்ற நடுநிலைச் சான்றோர் பர். வ. சுப. மாணிக்கனாரும், குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தையும் முக்கழக வுண்மையையும் ஒப்புக்கொண்டு விட்டார்.

இங்ஙன மிருப்பவும், 'தில்லிச் சாகித்திய அக்காதெமி' என்னும் இலக்கிய மன்றத்தால் ஏவுண்டு பர். மு. வ. வால் வரைவுண்டு அண்மை யில் வெளிவந்த 'தமிழ் இலக்கிய வரலாறு', தமிழின் தோற்றத்தையும் எதிர்கால நிலையையும் காட்டாத முண்ட வரலாறாயிருப்பதுடன்; குமரி நாட்டுத் தமிழ்த் தோற்றத்தை மறைத்தும், முக்கழக வுண்மையை மறுத்தும், ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரை அட்டாத்தியாயீ (பாணினீயம்) நிறைந்த தொல்காப்பியராக கி. மு. மூன்றாம் நூற்றாண்டின ரென்று யாதொரு சான்றுமின்றிக் குறித்தும், வடவெழுத்தைத் தமிழெழுத் தென்றும் தமிழெழுத்தை வடவெழுத் தென்றும் மயங்கியும், அயன் மொழிச் சொற்களைத் தமிழெழுத்தொடு புணர்க்காது அயன்மொழி யெழுத்தொடு புணர்த்தும், தமிழிலக்கணங் கல்லாதவரையும் தமிழ்ப் புலமை யில்லாதவரையும் தமிழதிகாரிகளாகக் காட்டியும், மொழி முதலாகா எழுத்துகளை மொழிமுதலாக்கியும், ஐயர் என்னும் சொல் வடிவை வ அய்யர்' என்று திரித்தும், மடக்கு, புதினம் என்னும் தென் சொற்கட்குத் தலைமாறாக யகமம், நாவல் என்னும் வேற்றுச் சொற்களை ஆண்டும், தமிழிலக்கியம் செய்யுள் முதலியவற்றின் தோற்றத்தைப்