உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உறைத்த எச்சரிக்கை

95

பற்றித் தவறான கருத்துகளைப் புகுத்தியும், தமிழர்க்குச் சமற்கிருதக் கல்வியும் வேண்டுமென்று சொல்லாமற் சொல்லியும், தமிழின் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய தனிப்பண்புகள் அயலார்க்கு மட்டுமன்றிப் புலவரல்லாத தமிழர்க்குத் தெரியாவாறும், இந்தித் திணிப் பிற்கும் திருக்கோவிற் சமற்கிருத வழிபாட்டு நிலைப்பிற்கும் வடவர் விருப்பிற்கும் தமிழ்ப் பகைவர் களிப்பிற்கும் ஏற்றவாறும், "வேலிக்கு ஓணான் சான்று, ஓணானுக்கு வேலி வேலி சான்று" என்பதை யொப்ப பர். தெ. பொ. மீ. யின் முன்னுரையே கொண்டு ஏனையிந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட விருப்பதால் தமிழ் கெடாவாறும் பொதுமக்கள் பணம் வீணாகாவாறும் இதை உடனே தடைசெய்ய வேண்டு மென்றும்; மொழியாராய்ச்சி, நடுநிலை, அஞ் சாமை, தன்னலமின்மை முதலிய பண்புகள் கொண்ட தமிழ்ப் புலவர் ஒருவர் எழுதும் உண்மையான தமிழிலக்கிய வரலாற்றையே, உலகெங் கும் பரப்ப வேண்டுமென்றும்; உ. த. க. கிளைகளும் மறைமலையடிகள் மன்றங்களும் திரு.வி.க. மன்றங்களும் தமிழ்க் கழகங்களும் தனிப்பட்ட தமிழ்ப் பற்றாளரும், தமிழக அரசு முதல்வர்க்கும் சாகித்திய அக்கா தெமிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றி யனுப்புவதுடன், எனக்குந் தெரிவிப்பின் நன்றாம்.

7

தமிழ் ஆரியப் போராட்ட அரங்கு தமிழக மேடையினின்று உலக மேடைக்கு மாறவிருக்கின்றது. இந்நிலையில் தமிழுக்கு மாறான எல்லா நூல்களும் தக்கவாறு கண்ணோட்டமின்றிக் கண்டனஞ் செய்யப் படுமென்பதை, வையாபுரிகளும் அவர் வழியினரும் அறிவாராக.

6