உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?

அறிவியன் மொழி

111

புதுப்புனைவு என்னும்

இற்றை யுலக நாகரிகத்திற்கு நாகரிகத்திற்கு அடிப்படையான அடிப்படையான நீராவிப்பொறி. அதைக் கண்டுபிடித்தவர் சேம்சுவாட்டு ஆங்கிலேயர்; அதன் வழியாய்ப் புகைவண்டி புணர்த்தியவரும் சியார்சு தீபன்சன் என்னும் ஓர் ஆங்கிலேயரே. மின்

விளக்கு, ஒலிப்பெட்டி, திரைப்படம், வானூர்தி முதலிய பற்பல அறிவியற் புதுப்புனைவுகளை அமைத்த அமெரிக்கரும், ஆங்கில மொழியினரும் ஆங்கிலர் வழியினருமே. ஆதலால், இற்றை அறிவியல் இலக்கியத்திற் பெரும்பகுதி ஆங்கிலத்திலேயே எழுதப்பெற்றுள்ளது.

செருமானியம், பிரெஞ்சியம், இரசியம் ஆகிய பிற மொழிகளிலும் அறிவியல் நூல்கள் எழுதப்பட்டிருப்பினும், அவை அத்துணைப் பெரு வாரி யானவையல்ல மேலும், ஏற்கனவே அறியப்பட்டுள்ள தலைசிறந்த மேலை மொழியை விலக்கிவிட்டு, ஏன் ஒரு புதிய ஐரோப்பிய மொழியை நாட வேண்டும்? இது, கையிலிருந்த வெண்ணெயைக் கொடுத்துவிட்டு நெய்க்கலைந்த கதையாகத்தானே முடியும்! ஆங்கிலத்தின் மேம்பாடு தெரிந்திருந்தும், அதை அகற்றிவிட்டுச் செருமானியம் போன்ற ஓர் ஐரோப்பிய மொழி யிலக்கியத்தைக் கற்கலா மென்று கூறும் இந்தியர், தமக்கு ஆங்கிலத்தின் மீதுள்ள அளவிறந்த, அடாத வெறுப்பையே காட்டுகின்றனர். அத்தகையோர் பித்தரின்பாற்பட்டவ ராதலால், பிறரால் பின்பற்றப்பெறத் தக்கவரல்லர் என விடுக்க.

சொல்வள

மொழி

உலகமொழிகள் எல்லாவற்றுளும் சொல்வளமிக்கது ஆங்கிலமே. பல நூற்றாண்டுகளாக ஆங்கில மக்கள் கலை நாகரிகப் பண்பாட்டில் தலைசிறந்து வந்திருப்பதனாலும், அதற்கேற்பப் பல கருத்துக்களையும் உணர்த்தப் பல்வேறு மொழிகளினின்று இலக்கக்கணக்கான சொற்களைத் திரித்துக் கொண்டத னாலும், ஆங்கிலமொழி வியக்கத்தக்க சொல்வளம் பெற்றுவிட்டது.

பண்டைமொழிகளுள் மிகப் பண்பட்டதும் சொல்வளமிக்கதும் தமிழே யாயினும், அதிலும் பழமொழிகளைப் பாகுபடுத்தவில்லை. ஆங்கிலத்திலோ, aphorism, axion, maxim, apothegm, adage, proverb, byword, saw, என எழு வகையாகப் பாகுபடுத்தியிருக்கின்றனர்.

pride, vanity, conceit, arrogance, assurance, presumption. haughtiness, insolence என்பன பருப்பொருளில் ஒருபொருட் சொற்களாயினும், நுண் பொருளில் வேறுபட்டன. sensuous, sensual, sensitive, sensible, sentient, sentimental, என்னும் சொற்களும், bravery, courage, gallantry, prowess, heroism என்னும் சொற்களும் இவை போன்ற எண்ணிறந்த சொற் குழுக்களும், ஆங்கிலத்தில் மிக நுண்ணிய பொருள் வேறுபாடுடையவை.

நாகரிக வுலகிலுள்ள எல்லாக் கலைகட்கும் நூல்கட்கும் உரிய சொற்களெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. ஞாலத்தில் மேலையர்க்குத் தெரிந்த எல்லாப் பொருள்களும் ஆங்கிலத்திற் பெயர் பெற்றுள்ளன.