உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

தமிழ் வளம்

இந்தியில் ஆங்கிலக் குறியீடுகளை மொழிபெயர்த்தற் கேற்ற சொற்களில்லை, ஆங்கிலச் சொற்களைத்தான் அதிலும் ஆளவேண்டும். அதைவிட ஆங்கிலத்தையே வைத்துக் கொள்வது நல்லது.

பண்பட்ட மக்கள் மொழி

சட்ட முறையில் முதன் முதல் மக்கள் உரிமை பெற்றது ஆங்கில நாடே. உலக நாடாட்சிக் குழுக்கட்கெல்லாம் தாயாகவும் வழிகாட்டியாக வும் உள்ளது ஆங்கிலப் பாராளுமன்றம். முதன்முதல் அடிமைத்தனத்தை அகற்றியதும், பெண்கள் நலத்தையும் பிள்ளைகள் நலத்தையும் பேணி யதும், ஏழைகளின் நிலைமையை உயர்த்தியதும், உழைப்பாளிகளின் பாட்டைக் குறைத்ததும், அகவை (வயது) வந்த இருபாலார்க்கும் குட வோலை யுரிமையளித்ததும், குடியேற்ற நாடுகட்கு விடுதலை தந்ததும், லவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைப் புகுத்தியதும் அநாகரிக மக்களை நாகரிகப்படுத்தியதும், ஆங்கில நாடே. பல நூற்றாண்டுகளாக நாகரிகப் பண்பாட்டிற் சிறந்துவரும் ஆங்கில மக்களின் பண்பட்ட மொழி. இந்தியா போன்ற பிற்பட்ட நாடுகளாற் புறக் கணிக்கப்படத் தக்கதன்று. ஒற்றுமை மொழி

சிறியவும் பெரியவுமாக எண்ணூறு நாடுகளாகப் பிரிந்து கிடந்த இந்து தேயம், ஆங்கில ஆட்சியிலேயே ஒரு குடைக்கீழ்க் கொண்டுவரப் பட்டது. நைசாம், மைசூர், திருவாங்கூர் போன்ற உள்நாட்டுச் சீமைக ளெல்லாம் படை குறைக்கப் பட்டு ஆங்கிலப் பாதுகாப்பிற்குட்பட்டதினா லேயே, காங்கிரசு என்னும் பேராயக் கட்சியியக்கம் அவற்றிற்குள்ளும் புகுந்து பரவவும், ஆங்கிலேயர் நீங்கின பின் அவ் வுள் நாட்டரசுகள் ஒழியவும் இந்தியா (பாக்கித்தான் நீங்கலாக) ஒரு கட்சி யாட்சிப்படவும், நேர்ந்ததென்றறிதல் வேண்டும். இன்றும் இன்றும் இந்தியாவை இந்தியாவை ஒன்றாய் இணைத்துக்கொண்டிருப்பது ஆங்கிலமே. இதை அறியாத இந்தி வெறியர் ஆங்கிலத்தை அகற்றின், நாளடைவில் மொழிவாரி மாகாணங்க ளெல்லாம் தனி நாடுகளாகப் பிரிந்து போகும் நிலைமையே ஏற்படும். இந்திய மொழி

இந்தி வெறியரும் வேறு சில வடவரும் ஆங்கிலத்தை அயன் மொழி என்கின்றனர். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள ஆங்கில விந்தியர், இந்தியக் குடிகளும் ஒன்றரைக் கோடியருமாக விருப்பதை அவர் எண்ணிப் பாராதிருப்பது எத்துணைக் குறுகிய நோக்கமும் நடுநிலை திறம்பிய செயலுமாகும்! இது அடிப்படைக் குடியுரிமை மறுப்பேயன்றி வேறன்று.

பொது மொழி

ஆங்கிலம் இன்று ஆங்கிலேயரால் பேசப்பட்டு வந்தாலும், அதன் மூலமான ஆங்கில சாகசனியம் (Anglo-saxon) ஒரு காலத்தில் ஆங்கிலே யர்க்கே சிறப்பான மொழியாய் இருந்திருந்தாலும், இற்றை நிலையில், சொல்லமைப்பில், உலகப் பொது மொழியாயுள்ளது. ஆங்கில சாகச் னியச் சொற்கள் மொத்தம் இருபத்து நாலாயிரமே. இற்றை யாங்கிலச்