உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?

115

முழு விடுதலையும் முழு மனத்தொடு தாமாக அளித் துவிட்டனர். அதனால், விடுதலை பெற்ற இந்தியாவும் பிரித்தானியச் செல்வாக்குள்ள பொது நல்வாழ்வு நாடுகளுள் ஒன்றாக இருந்துவருகின்றது. ஆங்கிலக் கல்வியில்லாவிடின், காந்தியும் காந்தியும் நேருவும் போன்ற தலைவரும் தோன்றியிரார்; இந்தியாவும் விடுதலை பெற்றிருக்காது

ஆகவே,

இந்தியர்க்குக் கண் திறந்ததும், விடுதலை பெற வழிகாட்டியதும், ஆங்கிலரொடு போராடி வெற்றி பெற ஆற்றலுள்ள கருவியாயிருந்ததும், ஆங்கிலமே. ஆதலால், ஆங்கிலத்தை அடிமைப்படுத்திய மொழியெனக் கருதுவது அறியாமையேயாம்.

பயன்பாட்டு மொழி

ஒருவர் உலகமெங்கும் உலகமெங்கும் சுற்றுதற்கும், அலுவல் பெறுதற்கும், அறிவடைதற்கும் மட்டுமன்றி, பிறரொடு உரையாடுதற்கும் ஆங்கிலம் உதவு கின்றது. கல்வி நிலையங்களிற் கல்லாதவர்கூடக் கேள்வி யறிவைத் துணைக் கொண்டு அயல் நாட்டாரொடு ஆங்கிலத்தில் உரையாடிப் பயன் பெறுகின்றனர்.

மேற்காட்டிய காரணங்களால் ஆங்கிலம் வெளிநாட்டில் மட்டு மன்றி இந் நாட்டிலும் இன்றும் மதிப்பு மொழியாக இருந்து வருகின்றது. ஒருவர் ஓர் இந்திய மொழியில் எத்துணைச் சிறந்த புலவராயிருப்பினும் ஆங்கில மறியாதவராயின் பெரும்பாலும் போற்றப்பெறுவதில்லை. அவர் ஆராய்ச்சியறி வெல்லாம் ஊமையன் கண்ட கனவே. தமிழாசிரியரொடு கல்வி நிலையத் தலைவர்கள் கை குலுக்காமையும் அரசியலலுவலகங் களில் தமிழில் வினவுவார் விடை பெறாமையும், தமிழுக்கு அல்லது நாட்டு மொழிக்குள்ள அவமதிப்பையும், ஆங்கிலத்திற்குள்ள மதிப்பை யுமே காட்டும். தமிழையே கற்பிப்பவராயினும் ஆங்கிலப் பட்டம் பெறாதார் கல்லூரிகளில் அமர்த்தப் பெறுவதில்லை. நாட்டுப் பற்றும் நாட்டு மொழிப்பற்றும் மிக்கவராகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கூட, ஆ ங்கிலமறியாதவரை உள்ளத்தில் அவமதிப்பதைக் குறிப்பால்

உணரலாம்.

6

வடநாட்டில் இந்தி வெறியிருப்பதால், தென்னாட்டிற்போல் நாட்டு மொழியவமதிப்பில்லை. ஆயின் அளவிறந்த, அடாத ஆங்கில வெறுப்பை அந் நாட்டார் கொண்டுள்ளது அருவருக்கத்தக்க செயலாகும். ஆங்கி லத்தின் மீது ஒருவர் எத்துணை வெறுப்புக் கொண்டிருப்பினும், அத னாற் பெறும் பயனைப் பெறாது விடுவது, குளத்தோடு கோபித்துக் கொண்டு குளியாமற்போன செயலேயாகும். ஆதலால் அறிவியன் மொழிக்கும் அன்மொழிக்கும் வேறுபாடறிந்து, ஆங்கிலத்தைக் கடைப் பிடிக்க. காலஞ் செல்லச் செல்ல ஆங்கிலப் பரப்பு விரியுமேயன்றிச் சுருங்காது. ஆகவே, ஆங்கிலத்தை அகற்றக் கருதுவார், அதை அகற்றுவாரே (அகலிக்கச் செய்வாரே)யன்றி அகற்றார் (நீக்கார்).