உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

East Norse

Booth

Teutonic

தமிழ் வளம்

கீழைநார் சியம்

House

தியூத் தானியம்

(Chair)man

Speaker

Meeting

(With)draw

English

ஆங்கிலம்

Poll

Upper

இலத்தீன், தாழிலத்தீன் ஆகிய இரண்டும் ஏறத்தாழ ஒன்றே. இங்கு ஆங்கில மல்லாத அயற்சொற்களாகக் காட்டப்பட்டவை யெல்லாம், அவ்வவ் வயன்மொழி வடிவிலேயே உள்ளவையல்ல; ஆங்கில வியல்பிற்கும் தேவைக்கும் ஏற்பத் திரிக்கப்பெற்றவையாகும். எ-டு : Pars அல்லது Partis என்பது இலத்தீன் சொல், அதனின்று Part, Party என்னும் ஆங்கிலச் சொற்கள் திரிக்கப்பட்டுள்ளன. இங்ங னமே பிறவும்.

மேற்காட்டிய சொற்பட்டியினின்று, இற்றை யாங்கிலம் ஆங்கி லேயர்க்குச் சிறப்பாக வுரியதன்றென்பதும், இலத்தீன் சொற்கள் மிகுந்த கலவை மொழி யென்பதும், அதை வெறுப்பது இலத்தீன் கிரேக்கம் முதலிய பிற மொழிகளை வெறுப்பதேயாகுமென்பதும், அறியப்படும். ஆட்சி மொழி

ஆங்கிலம் ஏற்கனவே ஒன்றரை நூற்றாண்டாக இந்திய ஆட்சி மொழியாக இருந்துவருகின்றது. அதன் தொடர்ச்சியை இந்தியைப் புதுவதாகப் புகுத்தற்கொப்பாகக் கருதுவது, பேதைமையேயாம். இந்தி புது மொழியா யிருப்பதொடு ஆட்சிக்குத் தகாத புன்மொழியாகவு மிருப்பது கருதற்குரியது.

விடுதலை மொழி

வடவர் பலரும் தென்னவர் சிலரும் ஆங்கிலத்தை அடிமைப் படுத்திய மொழியாகக் கருதுகின்றனர். ஆங்கிலேயர் தமிழ்நாட்டிற்கு மீட்பராக வந்தனர் என்னும் உண்மையைப் பலர் ஒப்புக்கொள்ளாது போயினும், ஆங்கிலர் ஆட்சியினின்று இந்தியா விடுதலை பெறுதற்கும் அவர் மொழியாகிய ஆங்கிலமே துணையாயிருந்ததென்பதை, எவரும் மறுக்கமுடியாது. ஆங்கிலேயர் கள்ளங்கர வின்றி இந்தியரெல்லார்க்கும் ஆங்கிலக் கல்வி கற்பித்து அறிவு புகட்டினர். அதனால், நாட்டு வரலாற் றையும் ஆட்சி முறைகளையும் குடியுரிமையையும் அறிந்த இந்தியப் பெருமக்கள், தேசிய இயக்கத்தைத் தொடங்கிப் பொது மக்களைத் துணைக்கொண்டு போராடி ஆங்கில ஆட்சியினின்று விடுதலை வேண்டி னர். ஆங்கிலேயரும் படிப்படியாக உரிமையளித்து வந்து இறுதியில்