உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்புரை மாலை நெடுங்கணக்கு

125

தமிழொலிகள் இயல்பானவும் மெல்லியனவுமாய் வடமொழி யொலிகளினும் வேறுபட்டவையென்பது, செவிப்புலனுள்ள எவர்க்கும் தெளிவாம். ஆரியர் நாவலந் தேயத்திற் கால்வைத்தபோது, அவர்மொழி இலக்கியமற்றதும் எழுதாக்

கிளவியுமாயிருந்தது. அவர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழ் முத்தமிழிலக்கணமும் பல்துறை யிலக்கியமும் கொண்டி ருந்தது. தமிழெழுத் திலக்கணம் பன்னிரண்டனுள், முறை என்பதும் ஒன்று. இது மேலையாரிய மொழி கட்கும் ஏனை மொழிகட்கும் இன்று மில்லை. ட, ண, ள, என்னும் வருடொலிகள் (linguals or cerebrals) சமற்கிருதத்திற்கு முந்திய வேத ஆரியமும் தமிழினின்று கடன் கொண்டனவே. இதுபோதுள்ள பழந்தமிழ் நூலான தொல்காப்பியமும் சமற்கிருத விலக்கணமான பாணினீயத்திற்கு முந்தியதே. பாணினீயத் திற்கு முந்திய ஐந்திரம் என்னும் வடமொழி யிலக்கணமும், தமிழ்நாட் டில் தமிழிலக்கணத்தைப் பின்பற்றி யெழுந்ததே. ஆதலால், வடமொழி நெடுங்கணக்கே தமிழைப் பின்பற்றி யமைந்ததென உண்மையறிக. வேற்றுமையமைப்பு

இனி, தமிழ்வேற்றுமை எட்டும் இயற்கையாகவும், ஏரண முறைப் பட்டும், தனித்தனி வேறுபட்ட பொருளுடையனவாகவும், இருக்கின்றன. அஃதோடு, மூவேறு வகையில் பெயர் கொண்டும் உள்ளன. எண் வகையில், முதல் வேற்றுமை, 2ஆம் வேற்றுமை, 3ஆம் வேற்றுமை, 4ஆம் வேற்றுமை, 5ஆம் வேற்றுமை, 6ஆம் வேற்றுமை, 7ஆம் வேற்றுமை, 8ஆம் வேற்றுமை என்றும்; பொருள் வகையில், எழுவாய் வேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, கருவி வேற்றுமை, வேற்றுமை, கொடை வேற்றுமை, நீக்க வேற்றுமை, கிழமை வேற்றுமை, இட வேற்றுமை, விளி வேற்றுமை, என்றும்; உருபு வகையில், பெயர் வேற்றுமை, ஐ வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி பெயர் (விளிக்கப்படும் பெயர்) வேற்றுமை என்றும், பெயர் பெற்றிருத்தல் காண்க.

வடமொழியிலோ, பிரதமா விபத்தி, துவிதீயா விபத்தி, திருதீயா விபத்தி, சதுர்த்தீ விபத்தி, பஞ்சமீ விபத்தி, சட்டீ விபத்தி, சத்தமீவிபத்தி, சம்போதனப் பிரதமா விபத்தி, என எண்பற்றியே எண்வேற்றுமையும் பெயர் பெற்றுள்ளன.

3ஆம் வேற்றுமைப் பொருள்களான கருவி, வினைமுதல் (கருத்தா) உடனிகழ்ச்சி ஆகிய மூன்றும் முரண்பட்டவை என்று கால்டு வ வெலார் கருது கின்றார். அம் மூன்றையும் ஆய்ந்து நோக்குவார்க்கு, அவற்றின் ஒற்றுமை தோன்றாமற் போகாது. வினைமுதல் என்பது உயர்திணைக் கருவியாதலால், கருவியுள் அடங்கும். இனி, கருவியுள் உடனிகழ்ச்சியும் உடனிகழ்ச்சியுட் கருவியும் நுண்ணிதாய்க் கலந்து