உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

தமிழ் வளம் கிடப்பதை, நுண்மாண் நுழைபுலங் கொண்டும் வழக்கு நோக்கியும் உணர்ந்தே, அவ்விரண்டையும் ஒரு ஒரு வேற்றுமைப்படுத்தினர் தமிழ் முதனூலாசிரியர். ஒரு கருவி கொண்டு ஒரு வினை செய்யும் போது அக் கருவி செய்வானுட னிருப்பதையும், ஒருவன் மற்றொருவனுடன் கூடி ஒரு வினை செய்யும்போது, அம் மற்றொருவன் துணையாய்நின்று கருவிப்படுவதையும், கூர்ந்து நோக்குக.

இனி, வழக்கு வருமாறு:-

ஆன் (ஆல்) உருபு :

மண்ணான் இயன்ற குடம் கருவி

ஊரான் ஒரு கோவில்

(ஊரான் ஊர் தொறும்)

ஓடு உருபு :

உடனிகழ்ச்சி.

ஊசியொடு குயின்ற தூசு கருவி

நாயொடு நம்பி வந்தான் ன் உடனிகழ்ச்சி.

ஆங்கிலத்திலும் இவ் வழக்கு ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.

With (ஓடு) :

Write with a pen

கருவி

Went with him உடனிகழ்ச்சி

By (ஆல்) :

Live by bread

Stand by him

-

கருவி உடனிகழ்ச்சி

இங்ஙனமே, 5ஆம் வேற்றுமைக்குரிய நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் நான்கும், நீக்கப் பொருளின் நுட்ப வேறுபாடுகளே. இங்கு ஒப்பு என்றது உறழ் பொருவை (comparative degree). ஒப்புப் பொருவு (positive degree) 2ஆம் வேற்றுமைக்குரியதாம்.

"ஐந்தா குவதே

இன்எனப் பெயரிய வேற்றுமைக் இதனின் இற்றிது என்னும் என்னும்

கிளவி அதுவே." (559)

என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக.

3ஆம் வேற்றுமைக்குக் கருவிப் பொருளொடு உடனிகழ்ச்சிப் பொருள் வடமொழியிலுமுள்ளது. இதை, "இனிச் சகார்த்தமாய் வந்த திருதியையைச் சகார்த்தத் திருதியை என்றும், சகார்த்தமென்றும்.. கூறுவர்" என்னும் பிரயோக விவேக உரையாலும் (பக்கம், 11), "saha governs the instrumental" என்று இராம கிருட்டிண கோபால பந்தர்க்கார் தம் சமற்கிருத முதற் புத்தகம் 24ஆம் பக்கத்தில் எழுதியிருக்கும் அடிக்குறிப்பாலும், அறிக.