உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

மதிப்புரை மாலை

தொல்காப்பியத் தில் உரிச்சொல்லாகக்

129

காட்டப்பெற்றவை யெல்லாம் பெயர் வினை யிடையுள் அடங்குகின்றன. ஏனை மூன்றிற்குப் போல் உரிச்சொற்குத் தனி இயல் வரையறையில்லை.

உரிச்சொற்கு இலக்கணங் கூறப்புகுந்த தொல்காப்பியர், "பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தி

எச்சொல்லாயினும்

பொருள் வேறு கிளத்தல்.

(உரியியல், 1)

என்பதையே சிறப்பாகக் கூறி, அதை விளக்கும் முகமாகப் பல செய்யுட் சொற்களைத் தனித்தனி நிறுத்தி, அகரமுதலி (அகராதி) முறையிற் பொருள் கூறிச் செல்கின்றார்.

இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றல், பெயரினும் வினையினும் மெய் தடுமாறல், ஒரு சொற் பலபொருட்குரிமை தோன்றல், பலசொல் ஒரு பொருட்குரிமை தோன்றல், என்னும் நான்கும் எல்லாச் சொற்கும் பொது விலக்கணமாதல் அறிக.

தொல்காப்பியர் உரிச்சொற்குக் கூறும் இலக்கணத்தையும், அதற்கு எடுத்துக்காட்டும் சொற்களையும் ஊன்றி நோக்கும்போது, செய்யுளி லேயே சிறப்பாய் வழங்கும் சொல்லும், செய்யுளிற் சிறப்பான பொரு ளைக் கொள்ளும் சொல்லுமே, உரிச்சொல்லெனத் தெரிய வருகின்றது. எ-டு : எறுழ், துவன்று-சிறப்புச் சொல் செல்லல், வம்பு-சிறப்புப் பொருட் சொல். "வெளிப்படு

சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன."

(உரியியல், 2)

என்பது, வெளிப்பட்ட குழூஉக் குறியும் வெளிப்படாத குழூஉக்குறியும் போன்ற இருவகைச் சொற்களைப் பற்றியதாகும்.

முனிவர் உரிச்சொல்லின்

நன்னூலாசிரியரான பவணந்தி முனிவர்

உண்மையான இயல்பை இயல்பை உணர்ந்தே,

பல்வகைப் பண்பும் பகர் பெய ராகி ஒருகுணம்

பலகுணம் தழுவிப் பெயர் வினை

ஒருவா செய்யுட் குரியன குரியன உரிச்சொல்".

பிங்கலம் முதலா

நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே".

(442)

(460)

எனக் கூறினார் என்க. இதனால், தொல்காப்பிய உரியியலே இடைக்கால நிகண்டு என்னும் உரிச்சொற்றொகுதி வாயிலாய் இற்றை அகரமுதலிக்கு மூலம் என அறிக.

உரிச்சொற்களை யெல்லாம் தொகுத்துப் பொருள் கூறும் சொற் றொகுதிகள் (நிகண்டுகள்), வடநூலாரின் வேர்ச் சொற்றொகுதியை (தாது