உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

ரூபா

தமிழ் வளம்

வளியை) ஒருபுடையொத்திருத்தலால், பெரும்பாலும் வேர்ச் சொல்லாயிருக்கும் வினையடிகளை யெல்லாம் உரிச்சொல்லாக மயங்கி னர் சிவஞான முனிவர்.

சில உரிச்சொற்கள் குறிப்புப் பெயரெச்சமாகவும் குறிப்பு வினை யெச்சமாகவும் இருத்தல் பற்றி, ஒரு, இரு முதலிய குறிப்புப் பெயரெச்சங் களையும் சிலர் தமிழிலக்கணப் பாடப் பொத்தகங்களில் உரிச்சொல் லெனக் குறிப்பா ராயினர். இவை, பொதுவளவுப் பண்புணர்த்தும் சிறு, பெரு என்பன போல், எண்ணளவுப் பண்புணர்த்தும் குறிப்புப் பெயரெச் சங்களே (adjectives) என அறிக.

திசைச் சொல்

திசைச்சொல் என்பன, பண்டைச் செந்தமிழ் நாட்டைச் சூழவி ருந்த பல திசைக் கொடுந்தமிழ் நாடுகளினின்றும் தமிழில் வந்து வழங்கிய சிறப்புச் சொற்கள். ஆகவே, செந்தமிழ் நாட்டுச் சொல் திசைச்சொல் எனப்படாது.

தமிழின் பிறந்தகம் தென்பெருவாரியில் மூழ்கிப்போன பழம் பாண்டி நாடாதலாலும், தமிழை வளர்த்த முக்கழகமும் பாண்டி நாட்டி லேயே இருந்தமை யாலும், இன்றும் பாண்டி நாட்டிலேயே ஓரளவு சிறந்த தமிழ் பயின்று வருதலாலும், பாண்டிநாட்டைத் தமிழ் நாடென் றும், பாண்டியனைத் தமிழ் நாடனென்றும் உரிச் சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) சிறப்பித்துக் கூறுவதாலும்,

'சந்தனப் பொதியச் செந்தமிழ்

செந்தமிழ் முனியும்

சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும்

சங்கப் புலவருந் புலவருந் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டி வளநா டென்ப.

"வேழ முடைத்து மலைநாடு மலைநாடு மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர் கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து. ா

"நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ் வில்லந் தொறுமூன் றெரியுடைத்து

பாட்டுடைத்து சோமன் வழிவந்த நாட்டுடைத்து நல்ல தமிழ்

(ஔவையார்)

- நல்லரவப் பாண்டியநின்

என்னும் பழம் பாட்டுக்களாலும், பாண்டிநாடே செந்தமிழ் நாடென்பது தெளிவாம்.

தமிழ்நாடு பரப்பிலும் மொழித்திறத்திலும் குன்றிக்கொண்டே வந்ததினால், செந்தமிழ் நாட்டளவு காலந்தோறும் மாறிக் கொண்டேயி ருந்திருக்கின்றது. ஆயினும், பிற்காலத்தார் கூறுகின்றவாறு, வைகையின் வடக்கு செந்தமிழ் நாடாகாது.