உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்புரை மாலை

131

செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு கொடுந்தமிழ் நிலமாவன: "குமரி யாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும்; சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும், வடுகும் தெலிங்கும் கலிங்கமும்" என்றார் தெய்வச் சிலையார். சிங்களமொழி தோன்றுமுன், கொடுந்தமிழ் நிலம் இன்னும் வேறுபட்டிருந்திருத்தல் வேண்டும். நன் னூலார், தொல்காப்பியர் எண்ணிய பன்னிரு நிலத்திற்கு மேலும் ஆறு சேர்த்துப் பதினெண்ணிலம் என்றது பெருந்தவறாம். இதனால், திசைச் சொல்லை அயன்மொழிச் சொல்லெனப் பெரும்புலவரும் மயங்க நேர்ந்தது.

திசைச்சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல்லே. பலதிசையி னின்று வந்து வழங்கியதால், ஒரு குறிப்பிட்ட நாட்டின் அல்லது கிளைமொழியின் பெயரால் அதைக் குறியாது, பொதுப்படத் திசைச் சொல் என்றனர் இலக்கணியர். திசைச் சொல், சிறப்புச்சொல்லும் சிறப்புப் பொருளிழந்த சொல்லும் என இரு வகைப்படும்.

எ-டு : தெலுங்கு :இராயசம் சிறப்புச் சொல்.

செப்பு

சிறப்புப் பொருளிழந்த சொல்.

தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கிய அயன்மொழிச் சொல் வடசொல் ஒன்றே. அதனால் அதை வடசொல் எனப் பிரித்துக் கூறினார். இங்ஙனமே, பிற அயன்மொழிச் சொற்களையும் அவ்வம் மொழிப் பெயராற் குறித்தல் வேண்டும். முன்பு கொடுந்தமிழாயிருந்தன இன்று திரவிட மொழிகள் எனத் திரிந்தும் வடமொழியொடு கலந்தும் உள்ளன. இதனாலும், திசைச்சொல் என்பது அயன்மொழிச் சொல் லெனச் சில இலக்கணப் புலவரும் பிறழ்ந்துணர நேர்ந்தது. சில திரவிட மொழிகள் ஆரியமாகவும் மாறியுள்ளன. இதைப் பஞ்ச திரவிடம் என் னும் பண்டை வழக்கும் வடநாட்டு மொழி வரலாறும் உணர்த்தும்.

யாது, எது.

"யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயிற் பொருள்வயிற் செறியத் தோன்றும்."

'அவற்றுள்,

. யாதென வரூஉம் வினாவின் கிளவி

அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்

தெரிந்த கிளவி யாதலு முரித்தே." (கிளவியாக்கம், 31, 32) என்றார் தொல்காப்பியர்.

இவற்றிற்கு: "யாது எவனென்னும் இரண்டு சொல்லும் அறியாப் பொருளிடத்து வினாவாய் யாப்புறத் தோன்றும் என்றவாறு

எவன்

உதாரணம்: இச்சொற்குப் பொருள் யாது, இச்சொற்குப் பொருள் எனவரும்."

6