உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்புரை மாலை

"

"விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்

"அஃதறி கல்லாதவர்

133

(162)

(427)

என்னும் குறளடிகள் அமைந்துள்ளன. ஆயின், இவை வேற்றுமைத் தொகையாம்.

இதனால், அஃது என்னும் ஆய்தம் பெற்ற வடிவம் பெரும் பான்மை எழுவாய் நிலையிலும், சிறுபான்மை பிற வேற்றுமைத் தொகை நிலையிலும், உயிர்முதற் சொல்லொடு நிலைமொழியாய் நின்று புணரும் என்பது பெறப்படும்.

முற்றுகரம் இயல்பான உயிராதலால், அது என்னுஞ் சொல், எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்"

(140)

என்னும் தொல்காப்பிய நூற்பாவிற் கேற்ப, உயிரொடு புணரின் உடம்படு

மெய் பெறும்.

எ-டு: அது+அன்று = அதுவன்று, அது+ஏ=அதுவே. "அறத்தா றிதுவென வேண்டா" _ IT "

(37)

'அன்பீனு மார் வமுடைமை

யதுவீனும்

(74)

'கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்லது"

(570)

என்னுங் குறளடிகளும்,

அவ்விரு முதலின் தோன்றும் அதுவே"

"அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்

(555)

(560)

என்னும் தொல்காப்பிய அடிகளும், இப்புணர்ச்சி யமைந்தனவாகும்.

இனி, இதற்கு விலக்காக,

"அன்று வருகாலை ஆவாகுதலும்

ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்

செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப."

எனத் தொல்காப்பியரே கூறியுள்ளார்.

(258)

இதற்கு, அதா அன்றம்ம, அதைமற்றம்ம என எடுத்துக்காட்டி, "மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் முடியாததனை முட்டின்றி முடித்தலென்பதனால், அதன்று, இதன்று, உதன்று என உகரங் கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க.' என்றுரைத்தார் நச்சினார்க்கினியர். இதைக் கூர்ந்து நோக்குங்கால்,

"உயிர் வரின் உக்குறள் மெய்விட் டோடும் யவ்வரின் இய்யாம் இய்யாம் முற்றுமற் றொரோவழி"

(164)