உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

தமிழ் வளம் அன்று

என்னும் நன்னூல் நூற்பாவிற்கேற்ப, அது என்னுஞ்சொல் என்னும் வருமொழியொடு குற்றுகரம்போல் உகரங்கெட்டுப் புணர்ந்து அதன்று என நின்றதே, செய்யுளில் அளபெடுத்து அதா அன்று என நீண்டும் பின்பு அதான்று 6 எனக்குறுகியும் வந்ததாகத் தெரிகின்றது. இக்கருத்துக் கொண்டே,

அதுமுன் வருமன் றான்றாம் தூக்கின்

என்று நன்னூலார் நூற்பா யாத்தார் போலும்!

'சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே.'

(180)

(176)

என்னும் தொல்காப்பிய நூற்பாவும், முற்றுகர வீற்றுச் சுட்டுச்சொல் உயிருடன் உகரங்கெட்டுப் புணர்தலு முண்டென்பதையே, வேறொரு வகையில் உணர்த்தும்.

மேற்கூறியவற்றால், என்றும் உயிர்முதற் சொல்முன் அஃது என் னும் ஆய்தம் பெற்ற சுட்டுச் சொல்லே வரவேண்டுமென்பது தவறென் பதும், அது என்னும் முற்றுகர வீற்றுச் சொல்லும் வரலாமென்பதும், அஃது என்பது உயிர் முதற்சொல் முதற்சொல் முன்னரேயே பெரும்பான்மை எழுவாயாகவும் சிறுபான்மை

வேற்றுமைத் தொகையாகவும் வருமென்பதும், அது என்பது பெரும் பான்மை உடம்படுமெய் பெற்றும் சிறுபான்மை உகரங் கெட்டும் உயிரொடு புணரு மென்பதும், அறியப்படும்.

"அன்பின் வழிய துயிர் நிலை யஃதிலார்க்கு" "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை யஃதும்

அறத்தா றிதுவென வேண்டா

"

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்"

(80)

(48)

(37)

(1330)

என்னும் திருக்குறளடிகள், செய்யுளில் உயிர் முதற் சொன்முன் தளைக் கேற்றவாறு அஃது, அது என்னும் இரண்டனுள் ஒன்று வரும் என்பதை உணர்த்தும்.

"யாதென் இறுதியும் சுட்டுமுத லாகிய

ஆய்த விறுதியும் அன்னொடு அன்னொடு சிவணும் ஆய்தங் கெடுதல் ஆவயி னான.

17

"யாதென் இறுதியும் சுட்டுமுத லாகிய

ஆய்த விறுதியும் உருபியல் நிலையும்".

(200)

(422)

என்னும் தொல்காப்பிய நூற்பாக்கள், அஃது என்பது வேற்றுமை விரியாய் வராதென்பதை நேரல் வழியாய் உணர்த்தும்.

இங்கு அஃது என்னும் சொற்குக் கூறியது இஃது, உஃது என்பவற் றிற்கும், அது என்னும் சொற்குக் கூறியது இது, உது என்பவற்றிற்கும், ஒக்கும் என அறிக.