உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்புரை மாலை

வேண்டும், வேண்டாம், வேண்டா.

135

தமிழ்மொழி முழுவளர்ச்சி யடையாதிருந்த காலத்தில், செய்து, செய்கின்று, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைச்சொற்களே பண்டைச் சேர நாடாகிய மலையாளத்திற்போல் முறையே முக்காலமும் பற்றிய முற்றுக்களா யிருந்துவந்தன. அவை பாலீறுபெற்று இற்றை வடிவுற்றபின், இடைக்காலத்தில் செய்கின்றான் என்னும் வாய்பாடு

யாது கரணியம் பற்றியோ செய்யுள் வழக்கற்றுப்போய், அதற்கீடாகச் செய்யும் என்னும் வாய்பாடே நிகழ்கால வினையாய் வழங்கி வந்திருக் கின்றது. இலக்கண வுரையாசிரியர் அதன் குறைபாட்டை நீக்கச் செய்யா நின்றான் என்றொரு வாய்பாட்டைப் படைத் திருக்கின்றனர். இதை வீரசோழியமும் அதற்குப் பிற்பட்ட நூல்களுமே ஒப்புக்கொண்டுள்ளன. செய்யும் என்னும் முற்று, இறுதியில் பலர்பாலொழிந்த படர்க்கை நாற்பாற்கே வரையறுக்கப்பட் டிருந்திருக்கின்றது. இதை,

"பல்லோர்

படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங் நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா.

என்னும் தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கும்.

(வினையியல், 30)

இலக்கிய வழக்கில் இம் முற்று இங்ஙனமாயினும், இன்றும் எதிர்கால வினையாக, சேரநாடாகிய மலையாள நாட்டில் இருதிணை ஐம்பால் மூவிடத்தும், சோழபாண்டி நாடாகிய இற்றைத் தமிழ்நாட்டில் படர்க்கை அஃறிணை யிருபாலிலும், வழங்கிவருகின்றது. பிற்காலத் திலக்கண நூல்களும் இதை எதிர்கால வினையாகக் கொண்டிருக்கின்றன.

விரும்புதல், மன்றாடிக் கேட்டல், தேவையாகக் கொள்ளுதல் முதலிய பொருள்களைத் தரும் வேண்டு என்னும் வினைச்சொல்லே, செய்யும் என்னும் வாய்பாட்டில் வேண்டும் என என நின்று, நின்று, ஒருவரை ஒன்று தப்பாது செய்யும்படி ஆர்வத்தோடாயினும் அதிகாரத்தோடா யினும் கேட்டலை அல்லது கட்டளை யிடுதலைக் குறிக்கும். ஒருவன் இறைவனை நோக்கி, "நீ எனக்கு அருள வேண்டும்." என்பது ஆர் வத்தோ டிரத்தல், அரசன் குடிகளை நோக்கி, "நீங்கள் இறை செலுத்த வேண்டும்." என்பது அதிகாரத்தோடு கட்டளையிடுதல், இவ் வினை தன்மை யிருபாற்கும் பொதுவாய் வரும்.

=

நீ வர வரவேண்டும் நீ வர (வருதலை) நான் விரும்புவேன், விரும்புகின்றேன் (யாம் விரும்புவோம், விரும்புகின்றோம்.) எதிர்காலப் பொருளில் நிகழ்கால வினை உலக வழக்கிற் பயின்றுவரும். எ-டு : நாளைச் சொல்கிறேன், அடுத்த கிழமை வருகிறேன். ஒருவர் ஒன்று செய்ய வேண்டும் என்பதில், செய்வான் வினையும் அதை விரும்புவான் வினையுமாக இருவர் வினைகள் கலந்திருக்கின் றன. இதையே,