உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

"இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி இருவயின் நிலையும் பொருட்டா பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன் பா லானும்."

என்னும் தொல்காப்பிய நூற்பா உணர்த்திற்று.

இதற்கு,

தமிழ் வளம்

(வினை. 46)

"இது செயல் வேண்டுமென்பதுபட வருஞ்சொல், தன்பாலானும் பிறன் பாலானுமென ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையையு டைத்தாம் என்றவாறு.

"

தானென்றது செயலது வினைமுதலை.

'ஓதல் வேண்டும் என்றவழி, வேண்டுமென்பது ஓதற்கு வினை முதலா யினாற்கும் அவனோதலை விரும்புந் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டு கொள்க.

"இதனான் ஒருசார் வினைச்சொற் பொருள்படும் வேறுபாடுணர்த் தினார்: உணர்த்தாக்கால் தெற்றென விளங்காமையி னென்பது." என்று சேனாவரையர் உரைத்திருத்தலை நோக்குக.

வேண்டாம் என்பது, வேண்டுவம் என்னும் தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்றின் எதிர்மறையாம். செய்வம் என்னும் வாய்பாட் டின் எதிர்மறை. செய்யாம் என்றாதல் காண்க. காணோம் என்னும் தன்மைப் பன்மை வினை காணேன் என்னும் ஒருமைப்பொருளில் (தவறாக) வழங்குதல் போன்றே, வேண்டாம் என்னும் பன்மைவினையும் வேண்டேன் என்னும் ஒருமைப் பொருளிலும் வழங்கும் என்றறிக. ஏவலொருமை.

தமிழில் ஏவலொருமை ஈறு பெற்றும் பெறாதும் வரும். இயல்பான பெயர் வடிவம் ஒருமையாயும், அதன் ஈறு பெற்ற வடிவம் பன்மையாயும் இருத்தல் போல்; இயல்பான வினைவடிவம் ஏவலொருமையாயும், அதன் ஈறுபெற்ற வடிவம் ஏவற் பன்மையாயும், வரும் என்க.

இருவகை ஏவலொருமையுள், ஈறு பெறாததே இயல்பானதும் சிறப்புடையதுமாகும். உலகவழக்கில் ஈறு பெறாததே ஒருமையேவலா யிருத்தல் காண்க. ஒவ்வொரு மொழியும் பொதுமக்களமைப்பென்றும், அதன் இலக்கியமே புலமக்க ளமைப்பென்றும், உலக வழக்கு மொழியே இலக்கிய வழக்கு மொழிக்கு முந்தியதும் மூலமுமாகு மென்றும், தெற் றெனத் தெரிந்துகொள்க

ஒருவனை நோக்கி ஒன்றைச் செய்யுமாறு ஏவும்போது, அவன் மறுப்பின், இதை யெனக்குச் செய்யமாட்டாயா என்னும் வினாப்பொரு ளில், இதைச் செய்யமாட்டாய் என்று குரல் மாற்றி இரப்பது வழக்கம். அக் குறிப்பு வினாவின் பொருள் இதைச்செய் என்பதே. இதனையே, "செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே.

(933)