உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்புரை மாலை

137

என்று குறித்தார் தொல்காப்பியர். இதன் பொருளையும் இதன் நடையை யும் சற்றும் நோக்காது, ஈறு பெறாது வரும் ஏவலொருமையெல்லாம் ஆயீறு புணர்ந்து கெட்டனவென்று வடமொழி யடிப்படையிற் பிறழ வுணர்ந்து பிழைபடக் கூறலாயினர் உரையாசிரியரெல்லாம். தமிழைத் தமிழடிப்படையிற் கற்றாலன்றி அதன் உண்மைப்பொருளை உணர முடியாதென்பதற்கு, இஃதொரு சிறந்த சான்றாம். இத்தகைய பொருள் களையெல்லாம் இந் நூலாசிரியர் தமிழடிப்படை யில் ஆய்ந்து, பல்லா யிரம் ஆண்டுகட்குப்பின் மீண்டும் தமிழ்மரபிற் கொத்தவாறு எடுத்துக் கூறியது பெரிதும் பாராட்டத்தக்கதாம்.

எழுத்தியல், பால்பகா அஃறிணைப் பெயர், வினையாலணையும் பெயர், வினையியல், ஆங்கிலமொட்டிய வழுவழக்கு, சில சொற்களின் இலக்கண வகைமை, சொல் சொற்றொடர்ப் பிழை திருத்தம், இலக்கியத் தமிழும் செய்தித் தாள் தமிழும், மெய்ப்பாடுகள், திணைமயக்கம்

7

ளுறையும் இறைச்சியும், பொருளியல், யாப்பியல், அணியியல், பின்னிணைப்பு முதலிய இந் நூற்பகுதிகள், பிறபாடப் பொத்தகங்களில் இல்லாத சிறப்புடையனவாய், ஆசிரியரின் பரந்த கல்வியையும், உலக வழக்காராய்ச்சியையும், நீண்ட உழைப்பையும், உண்மையான அறிவை மாணவர்க்கு எளிதாயூட்ட வேண்டுமென்னும் பேரவாவையும், உணர்த்து கின்றன. மாணவர் இந் நூலாற் பயன்பெறுக. பிற ஆசிரியர் ஊக்குக. உண்மைத் தமிழறிவை யொண்மதி யில்லாரும் எண்மை வழியெய்தற் கேற்றவகை-வண்மையதாய் எந்தொரு குற்றமும் இல்லா எழில்நடைத்தே செந்தமிழ் நூலெனச் செப்பு.

தமிழன் எங்கே?

(தென்புலோலியூர் மு.கணபதிப் பிள்ளை)

28.6.1964

எகித்தியம், சுமேரியம், பாபிலோனியம், யூதம், கிரேக்கம், உரோ மானியம் முதலிய பண்டை நாகரிகங்கட்கெல்லாம் முந்தியதாயும் அடிப் படையாயும், இன்று அறிவியற் குன்றேறி நிற்கும் மேலைநாடுகளும் இருண்டிருந்த நிலையில் தெருண்டு நின்றதாயும் உள்ள உலக முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கண்டு அவற்றைப் பல திசையும் பரப்பிய ஒப்புயர்வற்ற தமிழன் எங்கே?

அந்தோ! வந்தேறிகளால் மயக்குண்டு, மணவுறவும் உணவுறவும் அற்ற பல்வேறு சின்னஞ்சிறு பகுதிகளாகச் சிதைக்கப்பட்டு, ஒற்றுமை யிழந்து, மேன்மேலும் வெவ்வேறு அயலார்க் கடிமைப்பட்டுத் தம் முன்னோரின் பெருமையை முற்றும் மறந்து, நாடிழந்து நகரிழந்து நூலிழந்து சொல்லிழந்து, மறமான மதிகெட்டுத் தாய்நாட்டில் உரிமை யின்றிப் பெரும்பாலும் தற்குறிகளாய் உடலோடு கூடி நிற்கும் தமிழருக் கும் விடுதலையுண்டோ வென்று கவன்று கலங்கும் நிலையில், அவர்க்கு மயக்கந் தெளிவித்து மதிகூட்டும் மருந்தாக, இலங்கை அரசியல் மொழி