உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

தமிழ் வளம் பெயர்ப்பாளர், தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள 'தமிழன் எங்கே?' என்னும் தமிழ் வரலாற்றாராய்ச்சி நூல் எழுந்து இன்காற்று வீசுகின்றது.

இந் நூலில், தமிழன் பிறந்தகமாகிய 'இலெமூரியா' (Lemuria) என்னும் குமரி நாட்டு வரலாறும், இலங்கை அதன் எஞ்சிய பகுதியென் பதும், யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்த வகையும், அங்கு வழங்கும் சில பழமையான தமிழ் வழக்காறுகளும் பிறவும் சொல்லப்பெற்றுள்ளன. இதன்கண் உள்ள சில அரிய செய்திகளுள் இரண்டு வருமாறு: 1. பனாட்டு

"பனையின் முன்னர் அட்டுவரு காலை நிலையின் றாகும் ஐயென் ஐயென் உயிரே

ஆகாரம்

வருதல் ஆவயி னான"

(தொல். எழு.284)

'பனை' என்னும் நிலைமொழியின் முன் 'அட்டு' என்னும் வரு மொழி வரின், முன்னதன் ஐகாரம் கெட்டு அவ்விடத்து ஆகாரம் வந்தேறிப் 'பனாட்டு' என்று முடியும் என்பது, இந் நூற்பாவின் பொருள்.

'பனாட்டு' என்பது, இற்றைத் தமிழ்ப்பெரு நிலத்தில் சொல்லளவி லாயினும் பொருளவிலாயினும் எங்கேனும் வழக்கிலில்லை. அது பனங் கருப்புக்கட்டிக்குப் பண்டைக் காலத்து வழங்கிய சொல்லாயிருக்கலா மென்று சிலர் உன்னிப்பாய்க் கூறினர். ஆயின், அது அஃதன்றென்பது, 'தமிழன் எங்கே?' என்னும் நூலால் தெரியவருகின்றது.

'பனம்பழத்தை எடுத்து உரித்து, புளிங்காடி விட்டுப் பிசைந்து, களியாகப் பாயில் ஊற்றி, வெயிலிற் காயவிட்டு தயாரிக்கப்படுவது; தோற்றத்தில் சொக்கிலேற்றைப் (Chocolate) போன்றதாயிருக்கும்" என்று இந் நூலாசிரியர் கூறுகின்றார். (பக். 49,50)

இதனால், மேனாட்டார் போன்றே பல அரிய உண்பொருட் களைப் பண்டைத் தமிழர் உருவாக்கினர் என்பதும், அவற்றுட் பல இற்றைத் தமிழகத்தில் வழக்கிறந்தன என்பதும் பெறப்படுகின்றன.

2.

அத்துச் சாரியை

பனியென வருஉங் காலவேற் காலவேற் றுமைக் (கு) அத்தும் இன்னும் சாரியை யாகும்."

(தொல். எழுத். 241)

"மழையென் கிளவி வளியியல் நிலையும்."தொல். எழுத். 187) "வெயிலென கிளவி மழையியல் நிலையும்."

(தொல். எழுத். 378)

இந் நூற்பாக்கள், 'பனி', 'மழை', 'வெயில்' என்னும் சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சியில், 'பனியத்துச் சென்றான்', 'மழையத்துச் சென்றான்', 'வெயிலத்துச் சென்றான்' என அத்துச் சாரியை பெறும் எனக் கூறுகின்றன.