உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

தமிழ் வளம்

ஆரிய வடிமைப்பட்ட தமிழ்ப் பகைவர் எங்ஙனம் தமிழ்ப்பணி புரிந்திருக்க முடியும்?

க.

நாகராசன், மதுரை.

இவ்வுலகில் எந்த ஒரு மக்கள் தொகுதியிலாவது பிற மொழிக் கலப்பற்ற ஒரு தனி மொழி வழங்கி வருகின்றதா? அம் மொழி வழங்கு வது உண்மையாயின் அதன் காலம், வரலாறு இவற்றைச் சுருக்கமாகக் கூற முடியுமா? அவ்வாறு இல்லையெனின், நாம் தனித் தமிழ் இயக்கம் தொடங்குவது உலக வழக்குக்குப் பொருத்தமாகப் படுகின்றதா? காலப் போக்கில் மொழிக் கலப்பும் இனக் கலப்பும் நாட்டுக் கலப்பும் தோன்றத்தானே செய்யும்? அவற்றை ஏற்றுக் கொள்வதில் தவறென்ன? என்பவற்றை விரிவாக எழுத வேண்டுகின்றேன்.

மக்கள் மொழிகள், அவரவர் நாகரிக நிலைக்கேற்றவாறு சிறிதாயும் பெரிதாயும் பண்பட்டும் பண்படாதும் சொல்வளங் கொண்டுங் கொள் ளாது மிருக்கும். பண்பட்ட மொழியாயின் சொல்வளங் கொண்டே யிருக்கும். பண்பாடு இலக்கண வமைதியும் நுண் பொருள் வேறுபாடும் பற்றியதாகும்.

பண்படாத, ஆத்திரேலிய ஆப்பிரிக்க மொழிகளும், அமெரிக்கப் பழங்குடி மக்கள் மொழிகளும், நக்கவாரம் பாலினீசியம் போன்ற நாகரிகமற்ற தீவு மொழிகளும், சில மலைவாணர் மொழிகளும் ஏறத்தாழ ஐம்பது முதல் மூவாயிரம் வரை சொற்கள் கொண்டவை. அவை தனி மொழிகளாயிருப்பினும் சொல்வள மின்மையாற் சிறப்பற்றவை. இக்கால நாகரிக மக்களின் உலக வழக்குப் பேச்சிற்குக் குறைந்த பக்கம் இருபதி னாயிரம் சொற்கள் வேண்டும். ஆங்கில சாகசனியச் சொற்கள் (Anglo Saxon) ஏறத்தாழ இருபத்துநாலாயிரம். இற்றை யாங்கிலச் சொற்கள் ஏறத்தாழ ஐந்திலக்கம். இவற்றுள், நூற்றிற்குப் பத்தே ஆங்கிலம்; எண்பது கிரேக்க விலத்தீனம் (Greeko Latin); ஏனைப் பத்து ஏனை மொழிகள். சமற்கிருதச் சொற்கள் ஏறத்தாழ ஈரிலக்கம். இவற்றுள், நூற்றிற் கிருபது தென்சொற்கள்; இருபது வட திரவிடம்; முப்பது மேலையாரியம்; இருபது புனை சொற்கள்; பத்து இடுகுறிகள். குமரிக் கண்டத் தமிழ்ச் சொற்கள் ஏறத்தாழ ஓரிலக்கம். குமரி நிலம் முழுகிய பின்பும் பண்டைத் தமிழிலக்கியம் இறந்துபட்ட பின்பும், இன்று எஞ்சி நிற்கும் உலக வழக்குச் சொற்களும் செய்யுள் வழக்குச் சொற்களும் அரையிலக்கம். இவையெல்லாம் தனித் தமிழ்.

பண்பட்ட மொழிச் சொற்கள் இலக்கக் கணக்காய் எண்ணப்பட்டி ருப்பினும், அவற்றுட் பெரும்பாலன புணர் ர் சொற்களும் தொடர்ச் சொற்களுமான கூட்டுச் சொற்களே. தனிச் சொற்கள் சில பல்லாயிரமே. அவற்றுள்ளும் வேர்ச் சொற்கள் சின்னூறே.

மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். தானே தோன்றியது இயன்மொழி; ஒன்றினின்று திரிந்தது திரிமொழி. தமிழ்,