உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கேள்விச் செல்வம்

145

இந்து மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டத்தில் கி. மு. ஐம்பதினாயி ரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி முழு வளர்ச் சியடைந்திருந்த தனிமொழி. கி. மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டுத் தோன்றிய தலைக்கழகத்திலேயே முத்தமிழிலக்கிய விலக்கணங்கள் முற்றியிருந்தன. இலக்கணத்திற்கு முற்பட்டது இலக்கியம். இலக்கியத்திற்கு முற்பட்டது மொழி. இலக்கியமும் எழுதப்பட்ட நிலைக்கு முந்தியது எழுதப் படாநிலை. அசை நிலை, புணர் நிலை, பகு

சொன்னிலை, கொளுவு நிலை என நானிலைகள் கொண்டு வளர்ந்தது தமிழ் மொழி. இந் நானிலைக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றி ருத்தல் வேண்டும். மாந்தன் தோற்றம் கி. மு. ஐந்திலக்கம் ஆண்டுகட்கு முற்பட்டது. சாலி (ஜாவா)த் தீவிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்பு அக்காலத்தது. ஆப்பிரிக்காவில் தங்கனிக்கா நாட்டில் அண்மையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்பு, கி.மு. ஆறிலக்கம் ஆண்டுகட்கு முற்பட்டது. இவ் வீரிடங்களும் முழுகிப்போன குமரிக் கண்டத்தைச் சார்ந்தவை. பனிமலை (இமயம்) எழாது கடலுக்குள்ளிருந்த போது, ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய முக் கண்டங் களையும் ஒன்றாயிணைத்துக் கொண்டிருந்த தொன்முது பழநிலம் குமரிக் கண்டம்.

தமிழ் தானே தோன்றிய தென்மொழி, தொன்மொழி, முன்மொழி, மென்மொழி, வளமொழி, தாய்மொழி. உலகப் பெருமொழிகட்குள் தூய்மை பேணக்கூடிய தனிமொழி தமிழ் ஒன்றே.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்

ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்

என்னும் தண்டியலங்கார வுரைப் பழஞ் செய்யுளைக் கண்டு உண்மை தெளிக.

காலப்போக்கில் பல வகையிற் கலப்பு ஏற்படினும் அதற்கோர் அளவுண்டு. பகுத்தறிவுள்ள மாந்தர் நல்லதைக் கொள்ளவும் அல்லதைத் தள்ளவும் வேண்டும். மேனாட்டார் பழக்க வழக்கங்களிற் பலவற்றை நாம் மேற்கொள்ளினும், மண வாழ்க்கையும் பெண்டிரொழுக்கமும் பற்றியவற்றை நாம் மேற்கொள்ளவே முடியாது. தன்மானமும் கற்பும் அதற்குப் பெருந் தடையாய் நிற்கும். அது போன்றே மொழித்துறையி லும் தமிழின் மென்மையும் வளமும் செம்மையும் தூய்மையும் மரபும் பிற மொழிக் கலப்பை ஏற்பனவல்ல. எல்லாச் சொற்களையும் தமிழில் மொழி பெயர்க்க முடியும். பொதுச் சொற்களையெல்லாம் மொழிபெயர்த் தும், இயற் பெயர்களை (proper names) யெல்லாம் வரிபெயர்த்தும், தமிழின் தூய்மையைப் பேணிக் கொள்ளல் வேண்டும்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே."

(462)