உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

தமிழ் வளம்

என்னும் நன்னூல் நூற்பா, எல்லாத் துறையிலும் எல்லாவற்றையும் குருட்டுத் தனமாய்த் தழுவிக்கொள்ளுமாறு கூறிய நெறிமுறையன்று. தமிழ்ப் பகைவரும் தாய்மொழிப் பற்றில்லாதவரும் தன்னலக்காரரும், உண்மைக்கும் உத்திக்கும் ஒழுங்கிற்கும் மாறாக ஏதேதோ எத்தனையோ சொல்லலாம்.

காக்கை

நேர்நின்று

வெளிதென்பார் என்சொலார்? தாய்க்கொலை

சால்புடைத் தென்பாரு முண்டு"

என்பதையறிந்து உண்மையுணர்க.

முகவை ஆடல் வல்லான்

தாங்கள் 'Viceroy' என்பதற்குப் 'பதிலரையர்' எனத் தமிழாக்கியுள்ளீர்கள். அதே போல், 'Doyen of art' எனுஞ் சொற்றொடர்ப் பொருளை உன்னிய ஞான்று, 'doyen என்றால் 'மூத்த' என்னும் பொருளை அப்பாத்துரையார் அகர வரிசை தருகின்றது. எனவே, doyen என்பதை 'மூதரையர்' என்று கொள்ளலாமா?

Doyen என்பதை மூதாளர் என்று மொழி பெயர்க்கலாம்.

ஏரணத்திற்கு (Logic) ஆங்கிலம்கூட ஏற்றதாயில்லை என்று ணர்ந்து log lang' எனும் மொழியை உருவாக்கினர். இதற்கு உலக மொழிகளில் உள்ள நயம், ஏரணத்திறங்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் தமிழ் விடுபட் டுள்ளது. ஒருவேளை, தமிழ்த்திறம் அறிந்தால் இப் புதிய மொழிக் கண்டுபிடிப்பு தேவையில்லை என்று கருதுகிறேன். இது சரியா?

தமிழ் இயன் மொழி; தொன் மொழி; குமரிக் கண்டச் சிறப்புச் சொற் களையும் தனித்தமிழிலக்கியப் பெருஞ் செல்வத்தையும் இழந்த மொழி: ஆரியம் திரிமொழி: பின்மொழி; பன்னூற்றாண்டாகப் பல்வேறு அறிவியல் நூல்களை ஆக்கிக்கொண்ட மொழி. இவ் விரண்டிற்கும் மெல்லாடைக்கும் வன்கம்பளிக்கும் போற் பொருத்தமில்லை. மு. ஆனந்தராசன், பெல்காம்.

கற்பின் தெய்வம் நம் கண்ணகி நகரறிய நகிலைத் திருகி வட்டித் தெறிந்தமை. அவட்கும் அவளொத்த நாணுடை நங்கையர்க்கும் நற்செயலாகுமோ? 'இந் நகர் தீயுண்க!' என நவிலத்தகும் நாச்சொல் ஒன்றே கற்பின் நல்லாளாகிய கண்ணகிக்குச் சாலாதோ?

கற்புடை மகளிர் பெருஞ் சினத்தில் நகிலைத் திருகி யெறிவ தென்பது சிலப்பதிகாரம் தவிர வேறெத் தமிழ் நூலிலும் சொல்லப் படவில்லை.

"நரம் பெழுந் துலறிய நிரம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின மாறின னென் னென்றுபலர் கூற