உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கேள்விச் செல்வம்

மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் திடுவென் யானெனச் சினைஇக்

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்

துழவுவோள்....

//

147

(278)

செங்களந் என்னும் புறச் செய்யுள் போன்றவற்றில், போர்க்களத்திற் புறங்கொடுத் தோடியவன் உண்ட நகிலைத் தாய் வாளால் அறுத்தெறியும் செய்தியே சொல்லப்படுகின்றது. மேலும், நகிலைக் கையால் திருகிப் பிடுங்க வியலுமோ வென்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி. கண்ணகி தன் நகிலைக் கையாற் பறித்தெறிவது போற் சைகை மட்டுங் காட்டித் தன் பெருஞ் சினத்தைக் குறிப்பித்திருக்கலாம். ஊரை யெரியுண்ணச் சாவித்தற்குச் சொல்லே போதும். அவள் மெய்யாய்த் தன்

நகிலைத் திருகியெறிந்திருப்பின், அதனால் ஏற்பட்டிருக்கும் புண்ணைப் பதினான்கு நாள் எங்ஙனம் தாங்கியிருக்கவும், அதன் நோவொடு சேரநாட்டு நெடுவேள் குன்றம் சென்றேறியிருக்கவும், முடியும்? அவள் கற்பும் சினமும் மருத்துவத்திற்கு இடந் தந்திருக்காதென்பது தேற்றம். இனி, அவள் நெடுவேள் குன்றம் ஏறி விழுந்திறந்தபோது ஒரு முலை சேதப்பட்டுப் போயிற்றென்று கொள்ளலுமொன்று.

சு.

ஆறுமுகம், அருப்புக்கோட்டை.

"The more popular word in Tamil derived from Acarya is Asiriyer" என்று பர். எஸ். கே. நாயர் என்பவர் 'பேராசிரியர் இரா. பி. சேது' மலரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எம் ஆசிரியர், ஆசிரியர் எனுஞ் சொல்லை ஆசு இரியர் என்று பிரித்துக் காட்டிக் கற்பித்துள்

+

ளார். எந்த முடிவு ஏற்புடைத்து?

ஆசிரியன் என்னும் சொல்லை ஆசு + இரியன் என்று பிரிப்பதே ஏற்புடைத்து. சேதுப் பிள்ளை நினைவு மலர்க் கட்டுரை யாசிரியரெல் லாரும் மொழிநூற் பேரறிஞரல்லர்.

அறிவன், பறம்புக்குடி.

யாவை?

தமிழிற் புலமைபெற முறையாகப் பயிலவேண்டிய நூற்கள்

மறைமலையடிகளின் உரைநடை நூல்கள், தனிப்பாடற் றிரட்டு, நாலடியார், திருக்குறள், திருக்கோவை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களை மறைமலையடிகள் வழித் தமிழாசிரி யர்பாற் கற்க.

இரா.

பாலகிருட்டிணன்,

மதுரை.

  • தமிழ் மொழியில் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவையா? ஆம் எனில் அது எவ்வாறு ஆக்க வேண்டும்?