உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

"

என்னும் எழுத்தை முன்போல்

தமிழ் வளம் என்னுங் குறியாற்

குறிக்கலாம், ஒள, கௌ முதலிய ஔகார எழுத்துகளின் 'ள' என்னும் துணைவரியை, ளகர வடிவினின்றும் பிரித்தறிதற் பொருட்டுச் சற்றுச் சிறிதாக்கல் வேண்டும். இவை தவிர வேறு திருத்தம் வேண்டியதில்லை. நை. கு. குப்புசாமி, சேலம்.

  • இன்று சிறந்ததாகக் கருதப்பட்டுவரும் பண்டைக் காலத் தமிழ்ச் சுவடிகளைத் தேடினால் இன்னும் அவற்றில் சிலவேனும் கிடைக்கப் பெறுவோமா? தற்போது (உ.வே.சா.விற்குப் பிறகு) பழைய நூல்களைத் தேடுவதில் ஈடுட்டுள்ள தமிழறிஞர்கள் யாவர்?

இன்றைத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலையாள நாட்டிலும் யாழ்ப் பாணத்திலும் தேடினால், ஏதேனும் யாங்கேனும் பழந்தமிழ்ச் சுவடி கிடைக்கலாம். மேனாடுகளிலும் தேடிற் கிடைக்கும். எனக்குத் தெரிந்தவரை, பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவதில் ஈடுபட்டுள்ள வர் இன்று ஒருவருமில்லை.

பெ. கிருட்டிணசாமி, சென்னப்பநாயக்கன்பாளையம்

தென்னாற்காடு, தென்னார்க்காடு இவற்றில் எது சரி? ஏன்? 'தென்னார்க்காடு' என்பதே சரி. இங்ஙனம் 'வடார்க்காடு' அல்லது 'வடவார்க்காடு' என்பதும். ஆர்க்காடு என்னும் ஊராற் பெயர் பெற்றி ருந்த ஒரு பெருமாவட்டம் பின்பு வடக்கும் தெற்குமாக இரு மாவட்டங்க ளாகப் பிரிக்கப் பட்டது.

ஆர்க்காடு என்னும் ஊர் வேலூர் வட்டத்தைச் சேர்ந்தது; மிகப் பழமை யானது. "அழிசி யார்க்காடு" என்று குறுந்தொகையிலும் (258) அரியலங் கழனி யார்க்காடு" என்று நற்றிணையிலும் (190), வந்துள்ளது. ஆர் = ஆத்தி. ஆர்க்காடு= ஆத்திக்காடு. இச் சொல்லைப் புராணிகர் ஆறுகாடு என்று பிறழக் கொண்டு, வடமொழியிலும் சடாரணியம் என்று மொழிபெயர்த்து விட்டனர். ஷட் = ஆறு. ஆரணியம் = காடு. தாயம்மை,

சேலம் 9.

=

கடல்கோளால் அழிந்த இலக்கிய நூல்களுள் "பண்ணத்தி" என்பதுவும் ஒன்று எனப்படுகிறது. அந் நூல் பற்றிய விளக்கங்கள் கிடைக்குமாயின் அருள்கூர்ந்து தெரிவியுங்கள்.

"பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல் பண்ணத்தி யியல் பே."

என்பது தொல்காப்பிய நூற்பா.

(1436)

"பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு..... அவையாவன: நாடகச் செய்யுளாகிய பாட்டு மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப்பாட்டும் கட்கண்டும் முதலாயின....... அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க" என்பது பேராசிரியர் உரை.