உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கேள்விச் செல்வம்

149

(மஹா

காலஞ் சென்ற பண்டாரகர் (Dr.) பெரும் பேராசிரியர் மஹோபாத்தியாய) உ.வே. சாமிநாதையர் அவர்கள் அவர்கள் பண்ணத்தியை நாடோடிப் பாட்டென்றார்கள். அவர்கள் நாடோடிப் பாட்டென்றது

நாட்டுப்புறப் பாட்டை.

பண்ணத்தியென்பது, இந்துத்தானிப் பாட்டுகளில் வரும் தொகைய

ராவாயிருக்கலாம்.

"

பாவம்

"பாவி" என்பன தமிழ்ச் சொற்கள்தாமா?

'பாவம்' 'பாவி' என்பன வடசொற்கள். அறங்கடை, கரிசு, தீவினை என்பன பாவத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.

குணகுணி சம்பந்தம்" (மறை திருநாவுக்கரசு எழுதிய மறைமலை அடிகள் வரலாறு 64ஆம் பக்கம்) என்ற விளக்கத்தின்படி நல்லறிஞர் அழகிய தோற்றங்களில் விளங்க வேண்டியிருக்க, சாக்ரடீசு, ஆபிரகாம் லிங்கன் ஆகிய சிறந்த அறிஞர் அழகற்ற தோற்றம் பெற்றி ருந்ததேன்?

அகத்தழகும் முகத்தழகும் என்றும் ஒத்திருக்கவேண்டும் என்பது இயற்கை நெறியன்று. ஒட்டுமாவையும் கூட்டுமாவென்னும் கொட்டை மாவையும் ஒப்பு நோக்கிக் காண்க.

க.

பழனியப்பன், பொன்மலை, பொன்மலை, திருச்சி 4.

தமிழில் பன்னெடுங்காலமாக விரவி வழங்கிவரும் வடமொழி (ஆரிய எழுத்துகளான ஜ. ஷ, ஸ, க்ஷ, ஹ என்ற) எழுத்துகள் வட மொழியில் வேறு வடிவம் பெற்றிருக்கத் தமிழில், ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ என்ற வடிவம் வந்தது எவ்வாறு? எப்பொழுது? ஏன்?

,

ஆரியர் தென்னாட்டிற்கு வந்த பின்னரே தமிழ் நெடுங்கணக்கை யொட்டிக் கிரந்தாட்சரம் என்னும் ஆரிய வெழுத்துகளை அமைத்துக் கொண்டனர். அக் காலம் கி.மு. ஏறத்தாழ 1500. க

+ ஷ

௯.

கல்லூரிகளில் அனைத்தும் தமிழ்ப் பயிற்றுமொழி ஏற்படுத்து வதுபற்றித் தங்கள் கருத்தென்ன? அறிவியல் நூல்கள் தமிழில் போதுமான அளவு இல்லாதிருக்க, மாணவர்கள் அவற்றைத் தமிழில் படித்து எங்ஙனம் மேலை நாட்டு அறிவியல் அறிஞர்களுக்கு நிகராக விளங்க முடியும்?

இவ் வினாவிற்கு விடை ஏற்கனவே எழுதப்பெற்றுளது. முந்திய வினா விடை மாலைகளைக் காண்க.

ந. தட்சு, தட்சு,

மணலூர்.

முகத்தைக் குறிக்கும் போது "மூஞ்சி" என்றும் சொல்கிறோம். இவை இரண்டும் தமிழ்ச் சொற்கள்தாமா? விளக்க வேண்டுகிறேன்.

'முகம்' 'மூஞ்சி' இரண்டும் தமிழ்ச் சொற்களே.

முகம் மக்களது; மூஞ்சி (Muzzle) விலங்குகளது.