உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

தமிழ் வளம்

முகம் என்னும் சொல் வரலாற்றைத் தமிழ்ப்பொழிலிற் காண்க. மூஞ்சு மூசு மூஞ்சி. மூசுதல் மூச்சுவிடுதல், மூசு மூச்சு. "பிறகு" என்பதற்கு 'மல்லாக்க' என்றும் 'பொறக்கி' என்றும் சொல்லி வருகின்றனர். அவை எந்தச் சொற்களின் திரிவு?

புறகு கோவி.

மல்

மல்லா - மல்லாக்க. மல்லாத்தல் மலர்தல். பிறகு புறகே புறகேக்கு - புறகைக்கு - புறைக்கு.

க. வேலன், தஞ்சை.

இப்பொழுது புத்தாண்டு என்று சித்திரை முதல்நாளக் கொண்டாடு கிறார்களே, இது உண்மையில் தமிழ்ப் புத்தாண்டா? ஆம் எனின் எதன் அடிப்படையில் இதை வகுத்தனர்?

வில்லை.

தமிழாண்டு என்று தொடங்குவதென்பது திட்டமாய்த் தெரிய அறுவகைப் பெரும் பொழுதுகளுள் (பருவங்களுள்) இள வேனில் சிறந்த தென்னும் இலக்கிய அடிப்படையில் தமிழாண்டு சித்திரையென்னும் மேழ மாதத்தில் தொடங்கியது போலும்!

முகவை.

ஆடல்வல்லான்.

உலக மொழியாக விளங்க esperanto எனும் மொழி கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. உலக மொழிகளின் திறம்யாவும் வடித்தெடுக்கப் பட்ட மொழியிது வென்ப தறிவோம். தமிழின் திறம், வளம் இம் மொழியாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா? இல்லாவிடில் உலக மொழி யாகத் தமிழை ஆக்கிட இயலும் வழிவகைகளைக் கூறிட வேண்டு கிறேன். அயல் நாட்டாரும் நயந்து ஏற்றிடும் வகையில் தமிழை எளி தாக்கித் தற்போதைய esperantoவின் இடத்தைப்பெற ஆய்வு நடத்த முடியுமா?

ஆங்கிலம் உலக மொழியாகப் பரவாத 17ஆம் 18ஆம் 19ஆம் ம் நூற்றாண்டு களில், மேனாட்டு மொழியறிஞர் பெரும்பாலும் ஐரோப்பிய மொழிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு, volapuk, esperanto, ido, esperantido, interlinqua, novial முதலிய செயற்கை மொழிகளை உலக மொழிகளாகப் பயன்படுமாறு படைத்தமைத்தனர். இக்காலத்தோ, ஆங்கிலம் உலக மொழியாகிவிட்டது. இனி அதன் இடத்தை வேறொரு மொழி பெற முடியாது. "எல்லாரும் பல்லக்கேறினால் எவர் பல்லக்குத் தூக்குவது?" தமிழ் எளிய முப்பான் ஒலிகளைக் கொண்ட உலக முதற்றனிச் செம் மொழியாதலாலும், தமிழர் இனிமேல் ஆங்கிலர்போல் உலகமுழுவதும் பரவவும் பன்னாடுகளை ஆளவும் இயலாதாதலாலும், தமிழை உலக மொழியாகக் கருதுவது "வானத்து மீனுக்கு வன்றூண்டி லிடுவதே." தமிழ்நாட்டில் தூய்மையாக வழங்குவதும், உலகமெங்கும் கற்கப்படுவதுமே, தமிழ் இனி யடையத்தக்க பேறாம்.