உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கேள்விச் செல்வம்

"

சு.ஆ.

திருவாரூரன், திருப்பாதிரிப் புலியூர்.

151

சிலப்பதிகாரத்தில் 'கொலைக் களக் காதை'யில் 'சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்' என்று கோவலன் கண்ணகியிடம் கூறியதாகக் காணப்படுகின்றது. சிறு முதுக் குறைவி என்பது யாரைக் குறிக்கின்றது? கண்ணகியையா? அல்லது மாதவியையா? கண்ணகியைக் கூறுவதானால் அது ஏன் மாதவியைக் கூறியதாகக் கருதக் கூடாது?

"சிறு முதுக்குறைவி" என்பது கண்ணகியையே குறிக்கின்றது. கோவலன் முறைப்படி மணந்த குல மனைவி னவி கண்ணகியே. அவன் அவளை மடந்தைப் பருவத்திலேயே விட்டுவிட்டு மாதவியொடு கூடிப் பதினைந்தாண்டு போற் கழித்தான். கானல் வரிப்பாட்டிறுதியில், மாதவியை "மாயப் பொய் பல கூட்டு மாயத்தாள் என்று கூறித் துறந் தான். மதுரை வழிப்போக்கில் கௌசிகன் கொணர்ந்து நீட்டிய மாதவி முடங்கலைப் படித்த பின்பும், "தன்றீதிலள்' என்று மட்டும் சொன் னானே யொழிய அவளை மீண்டுங் காதலித்தானல்லன். கூடி வாழாதும் சிலம் பொழிந்த அணிகலன்களை யெல்லாம் கவர்ந்தும், கண்ணகிக்கே கொடுமை செய்தான். அங்ஙனமிருந்தும் அவள் ஆற்றியிருந்ததும், "சிலம்புள கொண்ம்" எனச் சொன்னதும், மதுரைக் கெழுக என்றவுடன் எழுந்ததும், ஆறைங்காதம் அருவழி நடந்ததும், குரவரையும் பிற உறவினரையும் பிரிந்து அயலார் ஊரில் தனித்திருக்க நேர்ந்ததும், கணவன் வழிபாட்டிற் கடுகளவுங்

குறையாமையும், கோவலன் கொடுமைகளையெல்லாம்

ஓருருவாக்கி அவன்முன் கொணர்ந்து நிறுத்தின. அவன் கரையில்லாக் கழிவிரக்கங் காண்டு, அவளை ஆற்றித் தேற்றுமாறு. ள

"மையீ ரோதியை வருகெனப் பொருந்திக் கல்லத ரத்தங் கடக்க யாவதும்

வல்லுந்

கொல்லோ மடந்தைமெல்

லடியென

வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி

சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்

டெழுகென வெழுந்தா யென்செய் தனையெனப்"

புலம்பி உள்ளமழிந்தான். இவ் வமையத்தில் "சிறு முதுக்குறைவி" எவ் வகையிலும் எள்ளளவும் ஏனை யொருத்தியைக் குறியாதென்பது தெளிதரு தேற்றம்.

ஆ. வேலாயுதம், கொழும்பு - 6.

தங்களால் எழுதப்பட்ட நூல்கள் எவை? அவற்றை எங்குப் பெற்றுக் கொள்ளலாம்?

கட்டுரை வரைவியல், உயர்தரக் கட்டுரை யிலக்கணம் (2 பாகம்), சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திரவிடத்தாய், முதற்றாய்மொழி, பழந்