உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

தமிழ் வளம் தமிழாட்சி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு, தமிழர் திருமணம் முதலியன. இவை, அப்பர் அச்சகம், 2/140, பிராடுவே சென்னை-1 என்ற முகவரி கொண்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற் கிடைக்கும். அங்குப் பெற்றுக்கொள்க. தமிழரின் பொற்காலம் எது?

தனித்தமிழே தழைத்தோங்கியதும், முத்தமிழிலக்கண விலக்கியங் களும் பல்கலை நூல்களும் முற்ற வழங்கியதும், வறுமை யறியப்படாதி ருந்ததும், பிறப்பால், சிறப்பில்லாதிருந்ததும், ஆரியத் தொடர்பு அணு வளவுமில்லாததுமான, (குமரிக் கண்டத் தென் மதுரைத்) தலைக் கழகக் காலமே தமிழரின் பொற்காலம்.

தமிழகத்தில் தோன்றிய ஔவையார்கள் எத்தனைப் பேர்? எந்தெந்தக் காலங்களில் வாழ்ந்தனர்?

இற்றை யிலக்கியத்தால் தெளிவா யறியப்பட்ட ஔவையார் இருவர். ஒருவர் கடைக் கழகக் காலத்தவர் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு). இன்னொருவர் 12ஆம் நூற்றாண்டினர். வான்கோழி இந் நாட்டிற்குப் பதினாறாம் நூற்றாண்டிற் கொண்டுவரப்பட்டதாயின், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை ஆகிய அற நூல்களை இயற்றிய வரை 16ஆம் அல்லது 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 3ஆம் ஒளவையா ராகக் கொள்ளவும் இடமுண்டு.

"தொல்காப்பியம்" தனித்தமிழில் தனித்தமிழில் எழுதப்பட்டுள்ளதா?

·

தொல்காப்பியம் ஓர் ஆரியரால் எழுதப்பட்ட சார்பிற் சார்பு நூல். அதற்குமுன் தனித்தமிழ் முதனூலும் வழிநூலும் நூற்றுக் கணக் கான சார்பு நூல்களும் அழிக்கப்பட்டுப் போயின. தொல்காப்பியத்தி லுள்ள வடசொற்களும் இருபதிற்கு மேம்பட்டவையல்ல. அந் நூலின் விரிவை நோக்கும்போது அவை பொருட்படுத்தத் தக்கனவாகா. இருப் பாணியுள்ள மர நாற்காலியும் மர நாற்காலி யென்றே சொல்லப்படுவது போல், ஒரு சில வட சொற்களுள்ள தொல்காப்பியமும் தனித் தமிழ் நூலென்றே கொள்ளப்படும்.

மேலும், தொல்காப்பிய வடசொற்கள் தமிழுக்கின்றியமையாதனவு மல்ல. அவை வேண்டாது புகுத்தப்பட்டனவாதலின், அவற்றை விலக்க வுங் கூடும்.

உலகில், பிற மொழிச் சொல்லின்றி முழுத் தூய்மையாய் எழுதக் கூடிய மொழி தமிழ் ஒன்றே. வட மொழிச் சொற்களுள் ஐந்திலிரு பகுதி தமிழாயிருப்பதை நோக்கும்போது, தொல்காப்பிய வடசொற் றொகையால் அதன் தனித்தமிழ் நடை இழுக்குறுவதன்றென்க.

கம்பராமாயணம் புகழ் பெற்றதுபோல் பாமர மக்களிடம் கழக இலக்கியங்கள் புகழ் பெறாததின் ஏதுவென்ன?