உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கேள்விச் செல்வம்

153

கழக விலக்கியம் கம்பராமாயணம் போற் புகழ் பெறாமைக்குக் கரணியங்கள் (காரணங்கள்),

1) ஆரியம் உயர்த்தப்பெற்றதும் தமிழ் தாழ்த்தப்பட்டதும். இராமாயணப் பாட்டுடைத் தலைவன் இறைவன் தோற்றரவு (அவதாரம்) என்னும் நம்பிக்கை.

2)

3)

4)

கம்பன் கல்வித் திறம்.

இராமாயணக் கதையின் விரிவும் பொருட் பன்மையும்.

5) இற்றைத் தமிழ்ப் பொதுமக்களின் தாழ்ந்த அறிவு நிலை. தாய்மொழிக்குத் தீங்கு இழைப்பவர்களை என்ன பெயரிட்டு

அழைக்கலாம்?

தாய்மொழிக் கொலைஞர் என்றழைக்க.

"மறை"யின் பொருள் விளக்கமென்ன?

கல்லா மக்கட்கு மறைவாயிருக்கும் பொருள்களை விளக்குவது மறை. ச. கி. வேணி வேணி இளம் பரிதி.

"இராவண காவியம்" பற்றித் தங்கள் கருத்து யாது? அதனைத் தடை செய்தது சரியா?

இராமாயணக் கதையால் தென்னாட்டார்க்கு அல்லது தமிழர்க்கு இழிவு ஏற்பட்டுள்ளதென்று கருதி, அதனை நீக்குவது இராவண காவியம். இராமாயணம் ஒரு வகுப்பாரால் மறை நூலொத்த மத நூலாகக் கொள்ளப்பெறுவதால், அவர்

மனத்தைப் புண்படுத்தக் கூடாதென்று அதனைத் தடை செய்துள்ளனர் அரசியலார்.

சீதை இராமனுக்குத் தங்கையென்றும், இராமன் தன் தங்கையை மணந்தானென்றும், இராமன் இராவணன் மனைவியைக் கவர்ந்தா னென்றும், பல்வேறாக நாற்பது இராமாயணக் கதைகளிருப்பதாகச் சொல்லப்படுவதாலும், இராமயணம் கட்டுக் கதையென்று ஆராய்ச்சி யாளராற் கருதப் பெறுவதாலும், எந்த இராமாயணக் கதை வேறுபாட்டை யும் தடை செய்யக் கூடாதென்பது ஒரு சாரார் கருத்து.

அறிவன், பறம் பை.

மொழி வளர்ச்சிக்குரிய தங்களின் வருங்காலத் திட்டமென்ன? தமிழிலுள்ள அயற் சொற்களெல்லாம் களைந் தெறியப்படல் வேண்டும். வழக்கு வீழ்த்தப்பட்ட பழந்தமிழ்ச் சொற்கள் புதுக்கப் பெறவும், இக் காலத்திற்கேற்ற புதுச் சொற்கள் தனித்தமிழிற் புனையப் பெறவும் வேண்டும்.

ஆட் பெயர், பொருட் பெயர், இடப் பெயர் எல்லாம் தமிழ்ச் சொற்களா யிருத்தல் வேண்டும்.