உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

தமிழ் வளம்

அயற் சொற்போன்றே அயலெழுத்தும் வேண்டா. மேலை அறிவியல் நூல்களெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப் பெறல் வேண்டும்.

தமிழ் நாட்டு ஆட்சியும் தமிழர் சடங்கும் திருமணமும் கோயில் வழிபாடும் தமிழில் நடைபெறல் வேண்டும்.

உயர் மேற் கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் விரும்புவார்க்கு ஆங்கிலத்திலும், உள்நாட்டிற் பிழைப்பிற்காக மட்டும் கல்வி கற்பார்க்குத் தமிழிலும், ஆக இரு மொழியிலும், முதலிலிருந்து இறுதிவரை கல்வி கற்பிக்கப் பெறல் வேண்டும்.

ம்

இந்தியும் சமற்கிருதம் என்னும் வடமொழியும் தமிழர்க்கு வேண்டா. தமிழ் கெட்டதே சமற்கிருதத்தால்தான். மேலை யாரியத்தைச் சேர்ந்த ஆங்கிலம் கீழையாரியமாகிய சமற்கிருதத்தினும் தமிழுக்கு மிக நெருக்கமாகும். இவ் வுண்மையை ஆராய்ச்சியில்லார் அறியார்.

இந்திய ஆட்சி ஆங்கிலத்திலேயே நடைபெறல் வேண்டும். வடவர் இதற் இதற் கிசையாவிடின், தமிழ்நாடு மொழியியல் தன்னாட்சி (linguistic autonomy) பெறல் வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டொடு நடுவண் ஆட்சிக்கும் (Central Govt.) பிற சீமைகட்கும் (மாகாணங்கட்கும்) ஆங்கிலத்திலேயே தொடர்பிருக்க முடியும்.

இந்தியைப் பொது மொழியாகத் தமிழறிஞர் ஒப்புக் கொள்ள வில்லையென்றும், அது பொது மொழியாகும் தகுதியுடையதன் றென்றும், அதுவும் ஆங்கிலம் போல் தமிழர்க்கு அயன்மொழியும் ஆரியமொழியு மாகு மென்றும், ஆங்கிலம் அறிவியன் மொழியும் இந்திய மொழியும் உலகப் பொது மொழியுமா

யுள்ளதென்றும், மாந்தன் வாழ்நாள்

குறுகியுள்ள இக் காலத்திற்கு இரு மொழிக் கொள்கையே ஏற்குமென்றும், அறிந்துகொள்க. பாண்டியன், கோவை . 2.

செ.

-

தமிழ் ஒலிக் குறியீடுகளில் தேவைப்படுங்கால் வடமொழி யெழுத்துகளான ஜ், ஹ், ஸ், ஜ், ஹ, ஸ், ஷ் முதலியவற்றையும்; ஆங்கில எழுத்துக்களான J, F, H, G முதலிய வற்றையும், எழுதிக்காட்ட என்ன முறையைக் கையாள வேண்டும்? நம் எழுத் தமைப்பில் தமைப்பில் ஏதாவது மாற்றம் செய்து கொள்ளலாமா? அவ்வாறாயின், அம் முறையைத் தென்மொழியில் எழுதுவீர்களா?

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் ஒலித் தொகுதியுண்டு. எல்லா மொழிகட்கும் பொதுவான ஒலிகள் ஏறத்தாழ இருபத்தைந்தே. பெருமொழிகளுள் மிகக் குறைந்த ஒலிகளுள்ளவை தமிழும், மிக நிறைந்த ஒலிகளுள்ளது வடமொழியு மாகும். தமிழின் அடிப்படை யொலிகள் முப்பது. வடமொழி யொலிகள் நாற்பத் தெட்டு முதல் ஐம்பத்து மூன்றுவரை பலவாறு சொல்லப்பெறும்.