உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கேள்விச் செல்வம்

155

வ்வொரு பெரு மொழிக்கும் சில சிறப்பொலிகளுள. மொழிக ளெல்லாம் வல்லியல், மெல்லியல் என இருதிறப்படும். அவற்றுள், வல்லியன் மொழிகள் ஏனை மொழிச் சிறப்பொலிகளுட் பெரும்பாலன வற்றை ஏற்குந் திறத்தன. மெல்லியன் மொழியோ அத் திறத்ததன்று. தமிழ், மெல்லியன் மொழிகளுள் தலை சிறந்தது. ஆதலால், பிறமொழி வல்லொலிகளை ஏற்காது. மெல்லொலியுடன் வல்லொலியை இணைப்பது. மெல்லிய மல்லாடையுடன் வல்லிய கம்பளியை இணைப்பது போன்றதே. ஆடவர் பெண்டிர் மேனிகள்போல், வல்லியன் மொழிகளும் மெல்லியன் மொழிகளும் என்றும் வேறுபட்டேயிருக்கும். தமிழில் வல்லொலிகள் கலப்பின் அதன் தன்மை முற்றும் மாறிவிடும். அதன்பின் தமிழாகாது.

அது

தமிழின் மென்மையை யுணர்ந்தே, கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர் தமிழ்ச் செய்யுட்கு வடசொல்லை வேண்டாது வகுத்த விடத்தும்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும் மே"

என்று வடவெழுத்தை விலக்குவாராயினர்.

இனி, 12ஆம் நூற்றாண்டில்,

"இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும் அல்லா அச்சை வருக்க முதலீறு

யவ்வாதி நான்மை லவ்வாகும் ஐயைம் பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும்

"

(884)

(146)

என்று வடசொற்கள் பெருவாரியாய்த் தமிழில் வந்து வழங்கு

வதற்கு வழி வகுத்த பவணந்தியாரும்.

வருக்கத்து

முதலும்

'ஏழாமுயி ரிய்யும் இருவும் ஐ இடையில் மூன்றும் அவ்வம் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே யகவும் ஐந்திரு கவ்வும் ஆவீ றையும் ஈயீ றிகரமும்" வீ

"ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம் முத லிரண்டும் யவ்விற்கு இய்யும் மொழிமுத லாகிமுன்

(147)

வருமே."

(148)

"இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமும் நகரக் ககரமும்

மிசைவரும் ரவ்வழி உவ்வும் ஆம்பிற."

(149)