உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

தமிழ் வளம் எனத் தமிழியற் கொத்தவாறே வடவொலிகளைத் திரிக்க உடன்பட்டார். 19ஆம் நூற்றாண்டில் தக்க புலவரும், புரவலரும் இன்மையால், தமிழ் உரை நடையிலும் செய்யுளிலும் வடசொற்களுடன் வடவெழுத்து களும் தாராளமாய் வந்து கலந்துவிட்டன. அவற்றையெல்லாம் நிறை தமிழ் வாணரான மறைமலை யடிகள் களைந்தெறிந்தார்.

ஒரு தமிழ்ப் பேரறிஞர் ஆய்த வெழுத்தினியல்பைப் பிறழ வுணர்ந்து, அதனைக்கொண்டு ஆரிய வொலிகளையெல்லாம் தமிழிற் குறிக்க வொண்ணு மென்றும், அதற்காகவே அது தமிழ் நெடுங்கணக்கில் வகுக்கப்பட்டதென்றும் கருதினார். அஃதாயின் தமிழ் ஒரு வல்லியன் மொழியாயும் அதன் நெடுங் கணக்கு ஆரிய மொழிகளெல்லாம் தோன் றியபின் ஏற்பட்டதாயுமிருத்தல் வேண்டும். தமிழின் தொன்மையும் முன்மையும் மென்மையும் அக் கொள்கைக்கு முற்றும் மாறாயுள்ளமை காண்க.

ஆய்தம் என்பது ஒரு வகை நுண்ணிய ககரவொலியே யன்றி வேறன்று. ஆய்தல் நுண்ணியதாதல்

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் ஆவயின் நான்கும் உள்ளதன்

நிழத்தல் சாஅய்

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.

நுணுக்கம்

(813)

ஆய்த வொலியைப் பிறழ வுணர்ந்தும், ஒலி வடிவிற்கும் வரிவடி விற்கும் இயைபின்மையை அறியாதும், ஆய்த வரிவடிவைத் துணை கொண்டு கு, ஷ் ஷ் போன்ற ஆங்கில வொலிகளைச் வொலிகளைச் சிலர் தமிழிற் குறித்து வருகின்றனர். எழுத் தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரியன்று. தமிழ் வரிவடிவால் ஓர் அயலொலியை இடர்ப்பட்டுக் குறிக்க முயல்வதினும், அவ் வொலிக்குரிய அயன் மொழி வரிவடிவையே தழுவுவது நன்றாயிருக்குமே! ஓர் ஒலியைத் தழுவும்போது ஏன் அதன் வரியைத் தழுவுதல் கூடாது? ஆங்கிலம் உலக மொழிகளெல்லா வற்றினின்றும் சொற்களைக் கடன் கொண்டிருந்தும், அவற்றை யெல்லாம் தன்னொலியாலும் தன் வரியாலுமன்றோ இன்றும் குறித்து வருகின்றது.

மொழியென்பது ஒலித் தொகுதியேயன்றி வரித் தொகுதியன்று. வரி மாறலாம். ஒலி மாறாது. ஒலி மாறின் மொழி மாறி விடும். செவிப்புலனாய வொலியைக் கட்புலனாக்குங் குறியே வரியாம். முதலில் வடசொற்களையும் பின்பு வட வெழுத்துகளையும் ஒவ்வொன்றாகப் புகுத்துவதையே, கொடுந்தமிழ் மொழிகளை ஆரிய வண்ணமான திரவிடமாக்கும் வழியாக, தொன்றுதொட்டு வட மொழி யாளர் கையாண்டு வந்திருக்கின்றனர். சேர நாட்டுச் செந்தமிழ் சோழ பாண்டி நாட்டொடு தொடர்பற்றுக் கொடுந் தமிழாகிப் பின்பு, ஆரியச் சேர்க்கையால் மலையாளம் அல்லது கேரளம் என்னும் திரவிட