உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

தமிழ் வளம் வொலியாகலான் இழைத்தல் மொழியைச் (articulate speech) சேர்ந்த அஆ வொலியாகாது. அத னாலேயே அகர முதல மொழியெல்லாம் என்னாது "அகர முதல எழுத்தெல்லாம்" எனக் கூறினார் திருவள்ளுவர். பினீசியம், எபிரேயம், அரபி, கிரேக்கம், இலத்தீனம், ஆங்கிலம் முதலிய மேலை மொழிகளின் குறுங்கணக்கிலும் அகரமே முதலெழுத்தாம். ஆங்கில அகரம் தமிழகரத்தை யொத்து நேராகவும் ஒலிக்கும்; அதை யொவ்வாது கோணையாகவும் ஒலிக்கும். அக் கோணையொலி, வடார்க் காட்டு ஆம்பூர் மக்கள் காய் என்னும் சொல்லிலுள்ள ஆகாரத்தையொ லிப்பது போன்றது. அவ்வொலி செந்தமிழிற் கொள்ளப்படாது. எழுத்திற் குரிய நானிலைகளுள் இறுதிநிலை யடைந்த எல்லா மொழியெழுத்துக் களும், அகரத்தையே முதலாக வுடையன.

சென்னைப்

ப. க. க. த. அகரமுதலிச் சீர் திருத்தம்

செ.ப.க.க.த. அகரமுதலி,

(1) வடசொல் முன்வைத் தெழுதப்படும் அகர முன்னொட்டிற்கு ரங்கம் அரங்கம் என்று எடுத்துக் காட்டியும்.

(2) இன்மை அன்மை மறுதலைப் பொருளில் வரும் அகரத்தை 'ந' என்னும் வடமொழி அவ்வியயத்தின் திரிபென்று கூறி, அதற்கு முறையே அரூபம், அப்பிராமணன், அதர்மம் என்று எடுத்துக் காட்டியும் உள்ளது.

அரங்கம் என்னும் சொல் அறுக்கப்பட்டது என்னும் வேர்ப் பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆற்றிடைக் குறையைக் குறிக் கும் தூய தென்சொல் என்றும், ஸ்ரீரங்கம் என வழங்கும் திருநகரின் பழம் பெயர் திரு வரங்கம் என்னும் தென்சொல் வடிவே யென்றும், அரங்கம் என்னும் தென் சொல்லே வடமொழியில் ரங்க எனத் திரிந்த தென்றும், அரங்கம் என்னும் உருப்படியில் வெள்ளிடை மலையென விளக்கப்பெறும்.

அல் என்னும் தென்சொல்லே, அன் எனத்திரிந்து வடமொழியில் 'ந' என இலக்கணப் போலியாக மாறியுள்ளதை, அல் என்னும் உருப் படியிற் கண்டு தெளிக.

இனி, அகரச் சாரியைக்கு எடுத்துக்காட்டிய 'தமிழப் பிள்ளை' என்னும் கூட்டுச் சொல்லையும் தமிழ் + பிள்ளை எனப் பகுக்காது தமிழன் பிள்ளை

+

யெனப் பகுத்து, நிலைமொழியீறு கெட்டு வருமொழி முதல் வலிமிக்க புணர்ச்சியாகக் கொள்வதே தக்கதாம் எனவும் அறிக.

இத்தகைய மறுப்பெல்லாம், இனிவரும் உருப்படிகளில் திருத்தம் என்னும் தலைப்பின் கீழேயே குறிக்கப்படும்.

மெய்யெழுத்துச் சாரியை. ஒரு சொல்லாக்க ஈறு, சிலபெயர்களின் ஆகார வீற்றுக் குறுக்கம், வண்ணக் குழிப்பு வாய்பாட்டீறு, நெடுங் கணக்குப் பெயருறுப்பு என்னும் என்னும் ஐம்பொருளும் சென்னை முதலியிற் குறிக்கப் பெறவில்லை.

யகர