உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

2.

அவரை

அவரை avarai.

வழங்கும் இடம்

தமிழகம்.

சொல் வகை : அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர் .

33

இயல் விளக்கம் பெரும்பான்மை பச்சை நிறமும் சிறுபான்மை வெண்ணிறமும் செந்நிறமுள்ளதும், பெரும்பாலும் தட்டை வடிவானதும், இரு விரலம் (inches) முதல் அறுவிரலம் வரை நீண்டு பல வகைப்பட்டி ருப்பதும், வீட்டுப் புறங்களில் விளைவிக்கப்படுவதும், நளி (கார்த்திகை) சிலை (மார்கழி) சுறவ (தை) மாதங்களில் ஊர் கொடியாகவும் (creeper) சிறப்பாக இவர் கொடியாகவும் (climber) படர்கொடியிற் காய்ப்பதும் கறி வகையாகச் சமைக்கப் படுவதும் உடல் நலத்திற்கேற்றதும், சுவையுள் ளதுமான காய் வகை a kind of bean including many varieties. மறுபெயர் களும் வழங்கும் இடமும்:

முதிரை (ப.கு.சி.), சிக்கடி (பிங்.), இவ்விரு பெயரும் இலக்கிய வழக்கு. முதிரை என்பது துவரையையுங் குறிக்கும்.

"கங்கு

லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும் பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர் தங்களுக்கும் கண் முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் காழுறையா வெண் முதிரைப் பிஞ் சாம் விதி."

இதன் பொருள்

(ப.கு.சி. 697)

விதை முதிராத வெள்ளையவரைப் பிஞ்சு, இரா வுணவிற்கும் மருந்துண்பவர்க்கும் ஊதை (வாதம்) முதலிய

க்

முந்நாடிக் குற்றம், புண், காய்ச்சல் விழிக்குள் முதிர்ந்த கோழைப் பில்லம் ஆகிய நோயுடையார்க்கும் நல்லதாம்.

வேற்றுமைப்பாடு. முதல்வகை. எ-டு : அவரையை, அவரையால், அவரைக்கு, அவரையின், அவரையது, அவரையில்.

பழமொழி :

அவரை போட்டால் துவரை முளைக்குமா?'

ஆடி மாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய்.' சொல்லமைவு

அம்' வேர் அல்லது அடி முதனிலை. 'அவல்', அமல் என்பதன் திரிபாகி மேன் முதனிலையாக நிற்கும் தொழிலாகுபெயர். 'ஐ' பண்பி யீறு. லகரம் ரகரமானது போலித் திரிபு.

சொல் வரலாறு

அம்முதல் அமுங்குதல், அமுக்குதல். அம்

அம்மி = அமுக்கி யரைக்குங் கல்.

அம் (அமு) (அமுகு)

அமுக்கு அமுக்கல்

அமுங்கச் செய்யும் தழை.

அம் அமிழ்

அமுங்கு அமுக்கு அமுக்கம் அமுக்கலான் கொப்புளங்களை

ஆழ் அழுந்து அழுத்து அழுத்தம்.