உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

தமிழ் வளம்

நோக்கின், தியூத்தானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலச்சொல் தமிழ்ச் சொற்கு மிக நெருக்கமாகவும், இலத்தீனச் சொல்லும் கிரேக்கச் சொல்லும் சற்றுத் திரிந்தும் சமற்கிருதச் சொல் மிகத் திரிந்தும் இருப்பதைக் காணலாம்.

ஒகரம் எகரமாகத் திரிவது இயல்பே.

எ-டு : சொருகு செருகு. இம் முறைப்படி பொறு என்பது ஆங்கிலத்திலும் இலத்தீனிலும் கிரேக்கத்திலும் ber, fer, pher எனத் திரிந்துள்ளது. சமற்

கிருதத்தில் bhar என்று ஒகரம் அகரமாகத் திரிந்துள்ளதும் இயல்பே யாயினும் அஃது எடுப்பொலியும் மூச்சொலியும் கூடி மிகத் திரிந்துள் ளமை காண்க. அத் திரிபே கலவைத் தமிழில் பரி என வழங்குகின்றது. Port என்னும் இலத்தீனச் சொல் பொறுத்தல் என்னும் தொழிற் பெயரினின்று திரிந்திருக்கலாம்.

திருத்தம்:

சென்னை யகரமுதலியில் bhar என்னும் சமற்கிருதச் சொல்லொடு ஒப்புநோக்குமாறு ஏவி, அத்திரிபையே மூலம்போற் குறிப்பாகக் குறித்தி ருப்பது தவறாகும். ஆரியர் தமிழரின் ஏமாறிய தன்மையைப் பயன் படுத்தி, வடமொழியை மூலமாகவும் தென்மொழியை அதன் திரிபாகவும் ஆயிரக்கணக்கான வடசொற்கள் தென்சொற்களின் பகுதியென் பதையும் வடமொழியில் ஐந்திலிரு பங்கு தமிழ் என்பதையும் செ.சொ.பி. அகரமுதலி தெள்ளத் தெளிவாகக் காட்டும்.

கொண்டுள்ள கொள்கையின் விளைவு இது.

கவனிப்பு.

செ.சொ.பி.அ. போலிகை யுருப்படிகள் அவ் வகரமுதலித் திட்ட வுறுப்பினர் அவ் வகரமுதலி யமைப்பை ஓரளவு அறிந்து கொள்ளு மாறே 'தென்மொழி'யிற் காட்டப்படுகின்றன. உண்மையான அகரமுதலி எல்லாவகையிலும் மிக விரிவாகவும் விளக்கமாகவும் வரும் என்பதை அறிதல் வேண்டும். ஆகவே, புலவர். அடல் எழிலனார் விடுத்த எச்ச ரிக்கை மடலை உண்மையில் உட்கொள்ளாவிடினும், நடைமுறையில் உட்கொண்டதாகவே முடியும் என்பதை இறுதியில் அனைவரும் அறிவர். இஃது, அவர் குறித்த "அரைவேக்காட் டாராய்ச்சியாளரும்" "பச்சை வெட்டாராய்ச்சியாளரும்" மேலதிகாரிகளையும் நாட்டுமக்களை யும் ஆரியரைப் போன்றே ஏமாற்றிவரும் பயனில் முயற்சியை, உடனே விட்டொழியுமாறு யான் விடுக்கும் எச்சரிக்கைக் குறிப்பாகும்.