உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகத் தமிழ்க் கழகக் கொள்கை

63

இயல்பு. தந்நலமன்றி ஒரு கொள்கையுமற்ற போலித் தமிழர் உயரிய கொள்கையுடைய உலகத் தமிழ்க் கழகத்தைக் கொள்கை யில்லாததென்று கூறுவது, கடுகளவும் மொழியறிவும் தாய்மொழிப் பற்றுமில்லாப் பேராயத்தார் மறைமலையடிகளையும் அவர்கள் வழிச் செல்வோரையும் அறிவிலிகள் என்று பழிப்ப தொத்ததே.

தமிழ்நாடு இன்னும் விடுதலை யடையவில்லை. ஆங்கிலேயன் தமிழனுக்கு மீட்பனாக வந்தானே யொழிய அடிமைப்படுத்தியாக வரவில்லை, மாபெரு நன்மை செய்தவனை மாபெருந் தீங்கு செய்த வனாகக் கருதுவது,

"பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண் டூதியம் போக

விடல்."

என்னுந் திருக்குறட்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டே யாகும். அது போன்று இற்றையாட்சியைத் தமிழாட்சியாகக் கருதுவதும் பேதைமை யின்பாற்பட்டதே. ஆரிய ஆட்சிபோய்த் திரவிட ஆட்சி வந்துள்ளது. ஆரிய ஆட்சிக்குப்பின் உடனடியாகத் தமிழாட்சி வரமுடியாது. விரை நடை, அடியெடுத்து வைப்பிற்கும் ஓட்டத்திற்கும் இடைப்படுவது இன்றி யமையாதது. அதுபோன்றே, திரவிட ஆட்சியும் ஆரிய ஆட்சிக்கும் ஆ தமிழாட்சிக்கும் இடைப்பட்டுத் தீரவேண்டும். இனிமேல்தான் தமிழாட்சி வரவியலும்.

தமிழாட்சியின் அறிகுறிகளாவன:-

1.

2.

3.

4.

5.

6.

தமிழைப் பண்படாத பன்மொழிக் கலவையென்றும் வட மொழிக் கிளையென்றும் காட்டித் தமிழனை நாகரிமற்றவனென் றும் காட்டு விலங்காண்டியென்றும் இழித்தும் பழித்துங் கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலி, திருத்தப்பெற்றுச் சிந்துவெளி நாகரிகப் பழம்பொருள்களை ஆராயும் பின்னிய அறிஞரைச் செவ்வையாக ஆற்றுப் படுத்தல்.

அமைச்சர் மட்டுமன்றித் தமிழரெல்லாரும் தமிழ்ப்பெயரே தாங்கல்.

தமிழ்வாயிற் கல்வி கலவை மொழியில் நடைபெறாது தனித்தமிழில் நடைபெறுதல்.

முழுநிறைவான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுக்கப் பெறல்

மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழறிஞர் தக்கவாறு போற்றப் பெறல்.

தமிழ்நாட்டு முப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மண்ட பத்தின் முன்பும், மறைமலையடிகள் வெண்கலப் படிமை