உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

தமிழ் வளம்

யேனும் சலவைக்கற் படிமையேனும் நிறுவப்பெறல்.

7. இதுவரை அச்சிற்கு வராத உலகவழக்குத் தமிழ்ச் சொற்க ளெல்லாம் தொகுக்கப்பெறல்.

8.

9.

10.

11.

12.

13.

குமரிநாட்டினின்று தொடங்கும் உண்மையான தமிழ்நாட்டு வரலாறு விரிவாக வரைந்து வெளியிடப்பெறல்.

குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மை தமிழரெல்லாராலும் அறியப்பெறல். தமிழ்நாட்டுக் கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல். தமிழ் உலகவழக்குப் படிப்படியாகத் திருந்திவரல்.

அரசியல் அலுவலகப் பெயர்ப் பலகைகளிலும் விளம்பரப் பலகை களிலும் தமிழச்சொற்றொடர்கள் புணர்ச்சியுடன் எழுதப்பெறல். தமிழ்நாட்டு ஊர்களும் தமிழிலுள்ள பெயர்ப்பலகைகளும் தூய தமிழ்ச்சொற்களையே தாங்கல்.

14. அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களி லெல்லாம் தமிழுக்குப் பேராசிரியப் பதவி யேற்படல்.

15. கானா, பிரனீசு மலைநாடு முதலிய நாடுகட்கு ஆராய்ச்சி யாளரையனுப்பி, அங்கத்து மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற் களைத் தொகுப்பித்தல்.

16. இந்திய ஆட்சியின் இந்தித் தொடர்பு அடியோடு நீக்கப் பெறல். இவையெல்லாம் நிகழுங் காலமே தமிழாட்சிக் காலமாகும். ஒரு சில தமிழர்க்கு உயர்பதவி கிட்டியவுடன் தமிழாட்சி வந்ததாகக் கருதுவது அறியாமையின்பாற் பட்டதே.

தமிழாய்ந்த தமிழனே தமிழ்நாட்டு முதலமைச்சனாதல் வேண்டு மென்று புரட்சிப் பாவேந்தர் கொண்ட வேணவா இன்னும் நிறைவேற வில்லை. மறைமலையடிகள் வழிச்சென்று மாபெரும் பாடுபட்டு தமிழின் தூய்மையைக் காக்கும் ஒரேயொரு தொண்டனுக்கும். ஓர் ஆராய்ச்சிப் பதவி யளித்துதவ மனமின்றி, அகவை மிகையென்று தட்டிக்கழித்த ஒரு முதலமைச்சர் எங்ஙனம் தமிழாய்ந்த தமிழனா யிருக்கமுடியும்? சிறந்த ஆராய்சியாளனுக்கு மூப்பும் ஒரு தகுதி தகுதி என்பதை, என்பதை, அவர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் நடித்தது மிக மிக இரங்கத்தக்கதே.

இனி, தண்டவாளத்தின்மேல் தலைவைப்பது மட்டும் தமிழ்ப் பற் றையோ தலைமைத் தகுதியையோ காட்டிவிடாது. வண்டிவராத வேளை யும், நூற்றுக் கணக்கான நண்பர் அண்டிச் சூழ்ந்து நிற்கும் போதும், ஓட்டுநர் வண்டியை மேற்செலுத்தாரென்று திட்டமாய்த் தெரிந்த பின்பும், எவரும் தண்டவாளத்தின் மேல் தலையும் வைக்கலாம்; ஒரு தூக்கமுந் தூங்கலாம். மேலும், எடிசன், சர்ச்சில், மறைமலையடிகள், திங்கட்செலவி