உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணரின் மூன்று அறிக்கைகள்!

75

மொழியைப் படிக்குமாறு எழுதிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. படித்தி ருக்கின்றனர். அவ் வுறுதிமொழியின் ஒரு பகுதி வருமாறு :-

"இத் தேச ஒற்றுமைக்கு ஒரு தேசியமொழி வேண்டியுள்ளது. இதற்கு எல்லா மொழிகளுள்ளும் மிகப் பொருத்தமானது இந்தியே. இதை நான் ஒப்புக்கொள்கிறேன்...'

"

தன்னைக் கொல்ல வந்தவனையும் பாதுகாக்கும் வேளாண்மை மடம் இவ்வுலகத்தில் தமிழனிடம்தான் உண்டு. வேறெந்த நாட்டிலும் இத்தகைய கேடு செய்யும் அமைப்பகத்தை அல்லது நிலையத்தை ஒரு நிமையமும் வைத்திரார். வருமுன் காப்போன், வருங்கால் காப்போன். வந்தபின் காப்போன் என்னும் மூவகைக் காப்போருள் கடைப் பட்டவனா கவும் தமிழன் இல்லையெனின், அவன் மக்கள் தொகை மிகையும் உணவுத் தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் உயிர் வாழ்ந்து என்ன பயன்?

சென்னை இந்தி பரப்பற் கழகம் உடனே தன் கடையைக் கட்டுமாறு தமிழக அரசு கட்டளையிட வேண்டும். சென்னை இந்தியெதிர்ப்பு மாணவர் இக் கழகத்தின் மேல் ஒரு கண் வைத்திருப்பதோடு, அக்கம் பக்கத்தி லுள்ள தமிழர்க்கும் இது செய்யுங் கேட்டை எடுத்துச் சொல்ல வேண்டும் அக் கழகத்தில் இந்திப்பட்டம் பெற்றவர்க்குத் தமிழ்நாட்டு அரசி யல் அலுவலகங்களில் எப்பணியும் தருதல் கூடாது.

அக் கழக வினைஞரொடு தமிழர் எவ்வகை உறவும் கொள்ளுதல்

கூடாது. நயன் மைக்

கட்சியின் நாவலிடு (வினைக் கழைப்பு)

இருக்குமிடந் தெரியாமலிருக்கும் நயன்மைக் கட்சி (party) திடு மென்று நிகழும் சிலை (மார்கழி) மாதம் 14ஆம் பக்கல் (31-12-68) சென்னைச் சிறுவர் அரங்கிற் கூடி தன் பொன் விழாவைக் கொண்டாடி யுள்ளது. அதோடு, தன்னை வலுப்படுத்து மாறும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதைச் செய்தித்தாள் வாயிலாகத்தான் அறிகின்றோம். என்பதை,

இற்றைத் தமிழன் எந்த அளவிற்குப் பேதை நயன்மைக் கட்சி யாட்சியும் அதன் கான்முளையாகச் சொல்லப்பெறும் தி. மு.க. ஆட்சியும் நன்றாய்த் தெரிவிக்கும்.

நயன்மைக்கட்சி 17 ஆண்டாகச் சென்னைக் கூட்டுநாடு முழுவதும் கோநேரின்மை கொண்ட குடியாட்சி செலுத்தினும், இறுதியில் மீண்டும் எழுந்திருக்க வியலாவாறு படுகிடையாய் வீழ்ந்தது. அதற்குக் கரணகம் (காரணம்) இரண்டு, ஒன்று அதன் தலைவர் விடுதலையுணர்ச்சி சற்று மின்றி ஆங்கில ராட்சியை முற்றுந் தழுவியது: இன்னொன்று அவர் நாட்டுமொழியை நாடாதது. அரசியற் கட்சிக்கு விடுதலையுணர்ச்சியே உயிர்நாடி யென்பதையும், மக்கள் முன்னேற்றத்திற்குத் தாய்மொழி வளர்ச்சி இன்றியமையாத தென்பதையும் அவர் அறியாது போயினர். அதனால் நாட்டுமொழி யறிவும் பொதுமக்கள் தொடர்பும் அவருக் கில்லாது போயின, நாட்டுமொழியை இகழ்ந்ததனால் புலவரையும் புறக்கணித்தனர்.