உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

தமிழ் வளம்

"இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு"

(374)

என்பதற்கேற்பப் புலவர் பொருட் செல்வமில்லா வறியராதலால், நெடுகலும் செல்வரும் சிற்றரசருமாகவேயிருந்த நயன்மைக்கட்சித் தலை வர், மறைமலை யடிகளைக்கூடப் பொருட்படுத்திப் போற்றவில்லை.

அற்றைச் சென்னைச் கூட்டுநாடு தென்னிந்தியத் திரவிடநாடு மூன்றனுள்ளும் ஒவ்வொரு பகுதியைத் தன்னுட் கொண்டதேனும் நயன்மைக் கட்சியைத் தெலுங்கராகிய வயவர் (P) தியாகராயச்செட்டியாரும் மலை யாளியராகிய (T) மாதவ நாயரும் ஆகிய திரவிடரும் தோற்று வித்தாரேனும், அவர் ஆரியத்தை யெதிர்த்து மேற்கொள்ளும் துணிவும் ஆற்றலும் ஊட்டியவை, தமிழும் தமிழ் நாடுமே யென்பதை எவரும் மறுக்கவொண்ணாது. ஆயினும், இன்றும் தமிழ்நாட்டிற் கன்னட வழித் தமிழரான பெரியார் ஒருவரே ஆரியத்தை அரிமாவுரத்தொடு எதிர்ப்பவர் என்பதையும் எவரும் மறைக்கவோ குறைக்கவோ முடியாது.

ஒரு நாட்டு மக்கள் நல்லறிவு பெறுதற்கும் ஓர் அரசியற்கட்சி நிலைத்து நிற்பதற்கும் விரிவான நாட்சரி ஒன்றும் பலவும் இன்றியமையாதவை என்பதை, இன்னும் தமிழ்நாட்டுத் தலைவர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் உணரவில்லை. நயன்மைக்கட்சி உச்சநிலையில் இருந்த காலத்தும், 'இந்து (The Hindu) என்னும் பிராமணர்அல்லது எதிர்க்கட்சிச் செய்தித்தாளே, பேரகலத் தில் 12 அல்லது 16 பக்கங் கொண்டு பல்துறைச் செய்திகளையும் வெளியிட்டு, நாடு முழுதும் பெருவாரியாகப் பரவி வழங்கிற்று. 'நயன்மை' (Justice) என்று கட்சிப் பெயரே தாங்கிய நயன்மைக் கட்சித் தாளோ. சிற்றகலத்தில் 6 அல் லது 8 பக்கமே கொண்டு பெரும்பாலும் கட்சிச் செய்திகளையே வெளியிட்டத னால், 'இந்து' போலப் பரவி நிலையாது கட்சியொடு மடிந்தது. இன்றும் 'இந்து', 'இந்தியன் எக்கசுப்பிரசு' 'மெயில்' போன்ற ஆங்கிலத் தாளோ, 'தின மணி', 'சுதேசமித்திரன்' போன்ற தமிழ்த்தாளோ, தமிழனுக்கு ஒன்றுமில்லை. தமிழருட் கோடிச் செல்வர் பலருளர். ஆட்சியதிகாரமும் தமிழன் கையில் உள்ளது. செய்தித்தாளால் இழப்பும் நேராது. கருத்துப் பரவுவதுடன் பலர் பிழைக்கவுஞ் செய்வர். ஆயினும், ஒருவர் மூளையி லேனும் தாளுணர்ச்சி தோன்றவில்லை.

நயன்மைக் கட்சி ஆரியத்திற்கு மாறானதாகவிருந்தும், அக் கட்சித் தலைவரான செல்வர் சிலர் தம் அறுபான் விழாவில் வெள்ளிக் குடமும் பொற்குடமும் பிராமணர்க்குத் தானஞ்செய்து அவர் காலில் விழுந்து கும்பிடு வதும், பிராமணரைக் கொண்டு வேதமோதுவித்துச் சமற்கிருதத்திற் சடங்கு நிகழ்த்துவதும், அறுபான் பிராமணர்க்கு இல்லங்கட்டிக் கொடுப்பதும், மற்ற பிராமணரையே கணக்கராகவும், சமையற் காரராகவும் அமர்த்திக் கொள்வதும், எத்துணைப் பேதைமையும் மானக் கேடுமான செயல்.

நயன்மைக்கட்சி ஆண்ட நாட்டுப்பரப்பில், முழுமையாகவும் பெரும் பகுதியாகவும் தமிழ்நாடு சேர்ந்திருந்தும், ஒருபோதும் தமிழன் முதலமைச்ச னானதுமில்லை தலைமைத் தீர்ப்பாளனானதுமில்லை. இன்றுவரை எத்தனை யரோ பிராமணரும் தெலுங்கரும் தலைமைத் தீர்ப்பாளராகியுள்ளனர். ஆயின்,