உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணரின் மூன்று அறிக்கைகள்!

77

இன்னும் தமிழர் ஒருவர்கூட அப் பதவியைத் தாங்கவில்லை. சென்ற ஆண்டு நிகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகர் பதவியமர்த்தத்திற்குப் பரிந்துரைத்த பட்டிகை வுறுப்பினர் மூவரும், தமிழ்ப் பற்றற்ற தெலுங்கரே.

பிராமணர் தமிழிசையையும் தமிழ் நடத்தையுமே கருநாடக சங்கீத மென்றும் பரதநாட்டியமென்றும் பெயரிட்டுக்கொண்டு, அவற்றை ஆரிய முறையில் வளர்க்கப் பல்வேறு கழகங்களையும் மன்றங்களையும் அமைத்துள் ளனர். தமிழர் இசைநுட்பத்தை அறிந்து தியாகராசர் கீர்த்தனைகள்போல உயர்மெட்டுக்களில் தமிழ்ப் பாட்டுக்களை இயற்றுவிக்காதும், குலவேற்றுமை யின்றித் தமிழிசை வாணரை ஊக்குவிக்காதும், தமிழிசைச் சங்கத்தில் பயனற்ற பண்ணாராய்ச்சி செய்து கொண்டும், ஆரியரைத் தலைமைதாங்க அழைத்துக்கொண்டும், நாடகத் தமிழை அறவே கைவிட்டும், தமிழ்க் கலை நாகரிக வளர்ச்சிபற்றிச் சிறிதுங் கவலையின்றி யிருந்துவருகின்றனர்.

சிவநெறியும் திருமால்நெறியும் தூய தமிழ் மதங்களாயிருந்தும், இன்றும் கோவில் வழிபாடு பிராமணராலும் சமற்கிருதத்திலுமே நடத்தப்பட்டு வருகின்றது. நயன்மைக்கட்சித் தலைவர் ஆட்சியிலுள்ள கோவில்களிலும் இதுவே நிலைமை.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி தமிழ் சமற்கிருதக் கிளை மொழி என்னும் முடிவுதோன்றப் பிராமணரால் தொகுக்கப்பட்டி ருப்பதை அறிந்தும், தி.மு.க. ஆட்சி அதைத் திருத்துவதற்குத் தினையளவும் முயற்சி செய்யவில்லை. இந் நிலைமையில் தமிழர் எங்ஙனம் முன்னேற முடியும்? இந்தியை எங்ஙன் ஒழிக்க வியலும்?

திருவள்ளுவர் ஈராயிரமாண்டு நிறைவு விழா

திருவள்ளுவர் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுவரை செல்லுதற்கிட முண்டேனும், கி. மு. 2ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதன்று என்பது முடிந்த முடிபாம். அம் முடிபுப்படி, சென்ற நூற்றாண்டிலேயே திருவள்ளுவர் ஈராயிர வாட்டை விழாவைக் கொண்டாடியிருத்தல் வேண்டும். ஆயின், அன்று தமிழகம் விழிப்புறாமையால் அது தவறிவிட்டது. எனினும், செய்ய வேண்டு வதைச் செய்யாமையினும் பிந்திச்செய்வது மேலாதலால், இந் நூற்றாண்டி லேனும் நாம் கொண்டாட நேர்ந்ததுபற்றி மகிழ்வுற வேண்டும்

திருவள்ளுவர் காலம் கி. மு. 2ஆம் நூற்றாண்டென்று முடிவு செய்யப் பெற்றிருப்பினும், மறைமலையடிகளின் மாபெரு மாண்பு நோக்கியும் அவர் கள் வகுத்த தொடராண்டு வழக்கூன்றியமை பற்றியும், அதை மாற்றாதி ருப்பதே தக்கதாம்.

திருவள்ளுவர் விழாவைப் பழைய முறைப்படி மேழ (சித்திரை) மாதத்திற் சிலரும், புதிய முறைப்படி சுறவ (தை) மாதத்தில் சிலரும், திருவள்ளுவர் மறைந்தநாட் கொள்கைப்படி கும்ப (மாசி) மாதத்தில் சிலரும், கொண்டாடலாம். உலகத் தமிழ்க் கழகக் கிளைகள் தம் ஏந்தும் (வசதியும்) விருப்பமும்பற்றி எம் மாதத்திலும் கொண்டாடுக.

ஆயின், உ.த.க சார்பான பொதுவிழா, அச்சிலிருக்கும் திருக்குறள் தமிழ் மரபுரைஅச்சானவுடன் அதன் வெளியீட்டுவிழாவொடும் கழக ஆட்டை