உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

தமிழ் வளம்

விழாவொடும் சேர்ந்தே. மதுரையிலேனும் திருப்பாதிரிப்புலியூரிலேனும் நடைபெறும். அதன் விளத்தமான அறிவிப்பு விடைமாதத் 'தென்மொழி'யில் வெளிவரும்.

திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாவைக் கொண்டாடுவோர் விளம்பர நோக்கும் வணிகநோக்குமின்றி உண்மையான முறையிற் கொண்டாடுவதே, திருவள்ளுவர் பெருமைக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற் கும் ஏற்ற தாகும். ஒரு நாளைக்கு ஒரு குறள் மேனியோ குறள் முழுதுமோ குருட்டுத்தனமாகப் பொறிவினை முறையில் உருப்போடுவதும், ஓரறிவுயிரு மற்ற சுவர்களில் எழுதி வைப்பதும், திருவள்ளுவர் கருத்திற் கேற்றவையல்ல. அதனால், அங்ஙனஞ் செய்பவர்க்கும் வீண்முயற்சியன்றி மறுமைக்கேற்ப ஒரு பயனும் விளையாது, ஏமாற்று வினைப்பயன் இம்மையிலும் நீடிக்காது. குல மத கட்சி வேறுபாடின்றித் தமிழர் அனைவரும் ஓரினமாக ஒன்றுபடுவதும், தமிழ்ப்பெயரே தாங்குவதும், தமிழிற் பேசும்போது தூய நடையிலேயே பேசுவதும். தம்மாலியன்றவரை பிறருக்கு நன்மை செய்வதும், உள்ளும் புறம்பு மொத்த வாய்மையைப் படிப்படியாகவேனுங் கடைப்பிடிப்ப துமே, திருவள்ளுவர் உள்ளத்திற்கேற்ற செயல்களாம். திருவள்ளுவர் கள் ளுண்டலைக் கண்டிப்பது போன்றே சூதாட்டையுங் கண்டிப்பதால், தனிப்பட்ட வராயினும் அரசினராயினும் சூதாட்டவகையிற் பொரு ளீட்டாமையும் திருவள்ளுவர் திருவுள்ளத்திற் கேற்றதாம். குறள் நெறியைக் கைக் கொள்ளாதவர் திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடுவது, ஏசுபெருமானைக் குறுக்கையில் (சிலுவையில்) அறைந்தவர் முழங்காற் படியிட்டு அவரை வாழ்த்தி வணங்கிய தொத்ததே.

"