உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை

87

வாழ்வான், அமுதுண்டவன் மாள்வான்! என்பது போன்றதே. ஆங்கிலம் உலகமொழியாகி விட்டதனால், விட்டதனால், வடநாட்டுத் தொடர்பிற்கும் அஃ தொன்றே போதும்.

இந்தியாளர் உண்மையாக ஆங்கிலத்தைப் புறக்கணிக்கவில்லை. அவரும் அதன் இன்றியமையாமையை உணர்ந்துதான் இருக்கின்றனர். தமிழர் அல்லது தென்னாட்டார் திறந்த வாயரென்றும், அதற்கு உடனி ருந்துதவும் கோடரிக் காம்புத் தலைவர் பலர் லவர் பலர் உளரென்றும், கண்டு கொண்டே இந்தித் திணிப்பை திணிப்பை விடாப்பிடியாய்க் கொண்டுள்ளனர். ஆங்கிலத்தை அவர் உள்ளத்தில் வெறுக்கா மையால், அவர் சொல்வது உள்ளொன்று புறம்பொன்றே. இதை அறிந்திருந்தும் தமிழ்நாட்டுத் தலைவர் தம் பதவி நிலைப்பிற்காகவே இந்தியை வரவேற்கின்றனர்.

இந்தி வெள்ளத்தை இன்று வன்மையாகத் தடுத்துக் கொண்டி ருப்பது ஆங்கில வல்லணையே. அதனை உடனே தகர்க்க இந்தியாரும் அஞ்சுகின்றனர். ஆங்கிலக் கதிரவன் அகலின் இந்தியா இருண்டுவிடும் என்பதை அவர் அறிவர். ஆயின், குறுகிய நோக்குள்ள சில தமிழ்ப் பேராசிரியரோ, ஆழ்ந்த எண்ணமும் கூரிய மதியுமில்லாது. ஆங்கில அணையுடைத்துத் தம் தவறான தமிழ்ப் பற்றினால் இந்தியை உடனே வரவழைக்க முற்படுகின்றனர். இவர் தாம் செய்வது இன்ன தென்றறியாது தம் நாட்டார் அல்லது இனத்தார் தலையில் மண்ணையும் நெருப்புத் தழலையும் வாரிப் போடுபவரே.

ஆங்கிலம் அறிவு மொழியும் உலக மொழியுமாயிருப்பதுடன். தமிழுக்கு நட்பு மொழியாகவும் உள்ளது. இக் காலத்தும் இனிமேலும் தமிழ்நாட்டில் இரு மொழிக் கல்வியேயன்றி ஒருமொழிக் கல்வி இருக்க முடியாது. இருமொழித் திட்டத்தில் தமிழுக் கடுத்த இரண்டாம் மொழி ஆங்கிலமே. ஆதலால், அடியினின்று முடிவுவரை பொதுக் கல்வி இருமொழியிலும் கற்பித்தல் வேண்டும். பிழைப்பிற்காகவே ஏதேனும் ஓர் அளவாகக் கல்வி கற்றுத் தமிழ்நாட்டிலேயே வேலையை மேற்கொள் பவருக்குத் தமிழ் வாயிற் கல்வி போதும். மேற்கல்விக்கும் அலுவற்கும் வெளிநாடு செல்ல விரும்புவார்க்கு ஆங்கில வாயிற் கல்வி இன்றியமை யாதது. ஆங்கிலவாயிற் கல்வி கற்பதனால் தமிழ் மாணவர் தம் தாய் மொழியை மறந்துவிட முடியாது. அலுவல் தொடர்பல்லாத செய்தி கள்பற்றி வீட்டிலும் வெளியிலும் அவர் பெரும்பாலும் தமிழிலேயே பேசவேண்டியிருக்கும். அன்னார்க்குத் தமிழ்ப் பற்று மட்டும் இருந்தாற் போதும். இத்தகைய கல்வித் திட்டத்தால் தமிழும் வளம் பெறும்; தமிழ் மாணவரும் தம் தனி வேற்று முயற்சியால் ஆங்கில அறிவும் பேச்சாற்ற லும் அடைந்து கொள்வது நன்றே.

தமிழ் வாயிற் கல்விக்கு, முதற்கண் ஆங்கில அறிவியற் குறியீடு களைத் தனித் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்வது இன்றியமையாத தாகும். இப்பணிக்கு ஆங்கிலமும் தமிழும் ஒருங்கே அறிந்த உண்மைத்