உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

தமிழ் வளம் தமிழன்பரை அமர்த்துவதே தக்கதாம். தமிழ்ப் பகைவரையும் போலித் தமிழரையும் தமிழ்ப் பற்றற்ற தெலுங்கரையும் தமிழறியாத பெருமாளரை யும் கொள்கையற்றவரையும், தன்னலக்காரரையும் உரமிலிகளையும் அமர்த்தி, பெரும்பாலும்

நடித்து

வடசொற்களாக மொழிபெயர்த்தும், சிறு பான்மை மொழிபெயர்க்காது ஆங்கிலச் ஆங்கிலச் சொற்களை அங்ஙனமே வைத்துக்கொண்டும் கலவை நடையில் கற்பித்துத் தமிழிற் கற்பிப்பதாக வருவது, மக்களை ஏமாற்றுவதேயன்றி வேறன்று. இதைத் தவறான தாய்மொழிப் பற்றுக் கொண்டு தமிழை வளர்ப்பதுபோல் தளர்த்துவரும் தமிழ்ப் பேராசிரியர் கவனிப்பதே யில்லை. மேலும் மாணவரைத் தமிழிற் கற்குமாறு வற்புறுத்தி வரும் தமிழ்ப் பேராசியார் சிலர், தம் ஆங்கிலப் பட்டத்தைத் தமிழிற் குறிக்கும் பொழுது தமிழில் மொழிபெயர்க்க விரும்பாமை வேடிக்கையான செயலாகவே விளங்கு கின்றது.

தமிழ் என்றும் இருக்கவேண்டு மெனில் ஆங்கிலத்துணை அதற்கு இன்றியமையாதது. ஆங்கிலத் துணை நீங்கின், உடனே இந்தி வெள்ளம் வந்து தமிழ்மேற் சாடி அதனை நாளடைவில் அடித்துக்கொண்டு போய்விடும். ஒரு மொழி உலகில் வழங்குவது அதைப் பேசுவாரின் தொகையைப் பொறுத்ததே. பேசுவார் தொகை குறையின் வழக்கழியும்; அதுவே மொழியழிவாம்.

இதுகாறும் கூறியவற்றால், இத் தமிழ்நாட்டிற்கு ஏற்பது தமிழும் ஆங்கிலமுமாகிய இருமொழித் திட்டமே யென்றும், ஆங்கிலம் நீங்கின் இந்தி வந்து தமிழை ஒழித்துவிடு மென்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க.