உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

பாவாணர் உரைகள் தவறாக - மிக மிகத் தவறாக சொல்லப்படுகிறது. அப்படி அந்தக் கருத்தை வைத்துக்கொண்டு நாம் ஒருக்காலும் முன்னேறவே முடியாது என்று நான் நினைக்கின்றேன் சொல்கின்றேன்.

தொல்காப்பியம் தான் முதல் இலக்கணம் என்று சொல்கின்றவர்கள் அதை வைத்துக்கொண்டு தமிழனுடைய பெருமையை நிலைநாட்ட முடியுமென்று கருதுகிறவர்கள் யார், எப்படிப்பட்டவர் என்று கேட்டால் கொடிக்கம்பத்தின் கீழே பிள்ளையாரைக் கண்ட உடனே இதுதான் கோயில் என்று வணங்கிவிட்டுப் போகிறவர்களைப்போடல் இருக்கின்றார்கள். கொடிக்கம்பத்திற்குப் பின்னால் என்ன செய்ய வேண்டும். முதல் மண்டபம் தாண்டி அதற்கப்புறம் இடை மண்டபம் தாண்டி உண்ணாழிக்ைகுப் போக வேண்டும். அந்த உண்ணாழிகையை இப்போது கர்ப்பகிரகம் என்று சொல்கிறார்கள். பழையகாலத் தமிழ்ப்பெயர் உண்ணாழிகை. திரு என்ற சொல் சேர்த்துத் திருவுண்ணாழிகை என்று சொல்லப்படுகிறது. இது கல்வெட்டில் இருக்கிறது. நான்அமைத்துககொண்ட சொல்லன்று திருவுண்ணாழிகை – அந்த கர்ப்பகிரகம் வரையிலே போக வேண்டும்.

இதற்கு மூன்று அறிவியல்களைப் படித்திருக்கவேண்டும். 'உலக வரலாறு' *(the world history) அதற்குப்பின் 'ஒப்பியன் மொழிநூல்' (Com- parative Philology) அற்குப்பின்பு குமுகாயப் பண்பாட்டு மாந்தநூல் (So- cial and Cultural Anthropology) இந்த மூன்று நூல்களும் படித்திருந்தால்தான் உண்மையாகத் தமிழனுடைய பெருமையை

அறியமுடியும். தொல்காப்பியத்தையும் உணரமுடியும்.

முதல் நூற்பாவில் எடுத்த அடியிலே அவர் என்ன சொல்கிறார். ‘எழுத்தென்ப் படுப... முப்பஃதென்ப

'என்று சொல்வார்கள் அறிஞர்கள்' அவ்வளவுதான். நெடுகச் சொல்லிக்கொண்டே போகிறார், “என்மனார் புலவர்”, “மொழிப்", நெடுக எங்கெங்கே இடமிருக்கிறதோ அங்கங்கே எல்லாம் இந்த சொற்றொடரை ண்டு கொண்டே போகின்றார். ஓர் எழுத்திலக்கணத்தை எழுதக் கூடமுடியாது.

graph)

எழுத்தென்றால் நான்கு நிலைகள் இருக்கின்றன.

முதலாவது படவெழுத்து (Picture writing/ Arowgraph/ Picto-

(குறிப்பு 7) இரண்டாவது கருத்தெழுத்து

மூன்றாவது அவையெழுத்து (Syllabary)

நான்காவது ஒலியெழுத்து (Phonetic characters)