உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் இறுதிப் பேருரை

91

இந்த நான்கு எழுத்தும் தரைக் கழகக் காலத்திலேயே கடந்துவிட்டன. அந்த நிலையில் இத் தமிழ் தோன்றியது. முதலாவது இந்த நெடுங்கணக்கு ஏற்பட்டதே தமிழில்தான். எல்லாப்பொருள்களையும் அறிந்தாய்ந்து பார்த்தார்கள்.

66

மூன்றுவகைப்பட்டிருக்கின்றன பொருள்கள்.

ஒரு தனி உயிர் (Life)

அல்லது உயிர் அல்லாத ஒரு பொருள் (Lifeless)

அல்லது ஒர் உயிரும் ஓர் உடம்பும் கலந்தது - உயிர் மெய் (Living body) உயிர், மெய், உயிர்மெய். இப்பொழுது உயிர் ஆவி போகிறது என்கிறோம். பேய் பிசாசு என்கின்றனர் ஆவியினர். உடம்பு இறந்த பிற்பாடு அதையெல்லாம் உயிர் போயிற்று ஆவி போகிறது என்று சொல்கிறோம். இறைவன் ஆவிவடிவாய் இருக்கிறான் என்று நாம் சொல்கிறோம். அதெல்லாம் உயிர்" "மெய்"யென்று பொல்வது நாம் பார்ப்பதெல்லாம். உயிர் இல்லாத பொருள் எது எது இருக்கிறதோ அது எல்லாம் ‘உயிர்மெய்' உன்று சொன்னால் மரம் முதல் மாந்தன் வரையிலே உல்லாம் உயிர்மெய்கள். இந்த மூன்று (நிலையையும்) இயல்பையும் கண்டார்கள். (சில எழுத்தானது) எழுத்தானது தானே உலிக்கிறது. இயங்குகிறது. மெய்யெழுத்து உயிரின் உதவியின்றி இயங்குவதில்லை. இந்த உயிர்மெய் எழுத்தானது உயிரும் மெய்யும் ஒன்றாகச் சேர்ந்தது. இதைக் கண்டுபிடித்து அந்த மூன்றுக்கும் தனிவடிவம் முதன்முதலாக அமைத்தவன் தமிழன் த்ான். அதனால்தான் அதற்கு நெடுங்கணக்கு என்று பெயர், முதலிலே, உயிரும் மெய்யும் சேர்ந்தது குறுங்கணக்கு. உயிர்மெய்யும் சேர்ந்ததால் நெடுங்கணக்கானது. இதற்குப் பின்னாலேதான் அந்த சமற்கிருதமோ மற்றவையோ வருகின்றன.

உயிர்

இந்த மாந்தன் – இங்கு - குமரி நாட்டிலே தோன்றினான். காலம் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருகிறது. அவ்வளவுதான். அறிவு வளர்ச்சியடைகிறது. மக்கள் தொகை பெருகுகிறது. வேறு இடம் செல்ல வேண்டும். அப்பொழுது தான் மக்கள் பரவல் தொடங்குகிறது. தமிழரின் தோற்றமும் பரவலும் (Ori- gin and Spread of Tamils) இந்த நூலை யாரும் படிக்காதிருந்தால் படித்துவிடுங்கள். இராமச்சந்திர தீட்சிதர் எழுதியது. நான் முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன், இப்போது பாராட்டப்படுகின்ற தமிழ்ப்புலவர்கள், சொல்லப்போனால் அவர்களைவிட மிகுதியாகப் போற்றப்படத் தக்கவர்கள் இரு வரலாற்று ஆசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார் (P.T. Srinivasa Ayengar) அதற்கப்புறம் இந்த இருவரும் இல்லாவிட்டால் நாம் பல செய்திகளுக்குச் சான்று காட்டமுடியாது. ஆகமம் எப்போது ஏற்பட்டது? கோயில் வழிபாடு எப்போது ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது, எதனாலே, ஏன் ஏற்பட்டது? என்று நன்றாக தெளிவாக History of Tamils -தமிழர் வரலாறு என்ற புத்தகத்தில் குறித்துள்ளார்..