உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

பாவாணர் உரைகள்

அது ஒன்றே போதும். மற்றதை எல்லாம் போய்க் காட்ட வேண்டிய தில்லை. பிராமணர்களிடத்தில் நம் மதத்தலைவராக - எப்படித் தலைவராக இருந்தாலும் சரிதான். அவர்களிடம் நாம் போய்க் கேட்டோமானால், அவர்களுடைய கருத்துகளைத்தான் தெரிவிப்பார்கள்.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது (To set the Fox to keep the Geese) என்பார்கள் ஆகையினாலே நம்முடைய கருத்திற்குமாறானவர் களிடத்திலே நாம் போய் அவர்களுடைய கருத்தைக் கேட்கக் கூடாது. இப்படி ORGIN AND SPREAD OF TAMILS (தமிழரின் தோற்றமும் பரவலும்). இதைக் கால்டுவெல் நன்றாக எழுதியிருக்கிறார். அந்த அசைநிலைக் காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பகுசொல் நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? கொளுவு நிலைக்காலத்திலே பிரிந்து போன வர்கள் யார்? பிறகு அந்த ஒட்டுநிலை (அதாவது இணை நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிரிநிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிறகு அந்த இடைநிலைக் காலத்தில் பிரிந்து போனவர்கள் யார்?

இவற்றையெல்லாம் அந்த மொழிநூல் வரலாற்றில் இருந்து நாம் அறிகிறோம். ஆங்கிலச் சொற்களை நான் மொழிபெயர்த்துச் சொல்கிறேன். தவிர, ஆங்கிலச் சொற்களையெல்லாம் இங்குச் சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. இப்படி பல்வேறு நிலையிலே தமிழ் பிரிந்து போயிருக்கிறது.

தமிழுக்கு அந்த Affiliation என்கிற இசைவே அந்தக் குறிப்பே தமிழுக்குப் பொருந்தாது.... பிள்ளையைப் பெற்றோரோடு இணைப்பது போலவும் கல்லூரிப் பல்கலைக் கழத்தோடு இணைப்பது போலவும் கிளைமொழியைத் தாய்மொழியோடு இணைக்கிற இணைப்பைத் தான் Affiliation என்று சொல்ல வேண்டும்.

பண்டாரகர் கால்டுவெல் (Dr. Caldwell) ஓர் உண்மையை நன்றாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுப்போய் விட்டார். எல்லாமொழி களிலும் சிறப்பாக ஆரிய மொழிகள் எல்லாவற்றிற்கும் எந்தச் சுட்டுச்சொற் களுக்கும் மூலம் தமிழிலுள்ள ஆ(அ), ஈ(இ), ஊ(உ) தாம். இந்த மூன்று சுட்டெழுத்துக்களிலிருந்துதான் எல்லாச் சுட்டெழுத்துச் சொற்களும் (De- monstrative pronouns) தோன்றின. (குறிப்பு 8) எப்படி அந்ததந்தச் சொல் - அ - விலிருந்து அவன், அங்கே இந்தச் சொற்களெல்லாம் எப்படி அகரத்திலிருந்து உண்டாயினவோ அப்படித்தான் என்பது இகரத்திலிருந்தும் உண்டு என்பது உகரத்திலிருந்தும் வந்தன என்பது கருத்து. இந்தச் சொற்கள்தான். மூன்று சுட்டுச் எழுத்துக்களிலிருந்து தான் ஆரியமொழிகளிலுள்ள அத்தனைச் சுட்டுச் சொற்களும் தோன்றியிருக் கின்றன. மிகத் திட்டவட்டமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதை இப்போது நாம் ஆய்ந்து பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.