உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் இறுதிப் பேருரை

93

ஆகையினாலே அந்த மேனாட்டு ஆய்வாளர்கள் தமிழ் அறியாததினாலே சமற்கிருதத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு Divine Theory, Nature Theory, pooh pooh Theory, Ding - Dong theory, Bow – wow theory, Gesture theory, To - he theory, contact theory, contract theory (தெய்வக் கொள்கை, இயற்கைக்கொள்கை, குறிப் பொலிக்கொள்கை, மணியொலிக்கொள்கை, ஒப்பொலிக்கொள்கை, வைகைக்கொள்கை, அயாவுயிர்ப்புக் கொள்கை, தொடர்புக்கொள்கை, ஒப்பந்தக் கொள்கை இப்படியான மொழித் தோற்றக் கொள்கைகள்) இப்படி, அதிலே இன்னொன்று மிகவேடிக்கையானது. செசுபர்சன் (Jesperson) சொன்னது. பாட்டொலிக் கொள்கை (Musical Theory) அதாவது Primi- tive theory. அதற்கப்புறம் கடைசியாக (குறிப்பு 9) மானெசு உதேசு என்கிற பெரிய மொழிநூல் ஆராய்ச்சியாளர் ஒருவர் - அமெரிக்கர் Animal cried theory உன்று ஒன்றைப் புகுத்தியிருக்கிறார். அதாவது விலங்கினத் தினுடைய ஒலிகளிலிருந்து தான் மாந்தனுடைய மொழியின் தோற்றத்தை நாம் காண முடியும் என்று எழுதியிருக்கிறார். முட்டாள்தனமான கருத்து, இந்தப் பேசுதற்குரிய தன்மையே மாந்தனுக்கு, மாந்தன் நிலையிலேதான் தோன்றுகிறது. பலவகையான ஒலிகள் இருக்கின்றன. மெய்தான். ஆனால் இந்த மொழியானது எந்த விலங்கினத்துக்கும் தோன்றாது. விலங்கு கு எவ்வளவுகாலம் ஆனாலும் அப்படியேதான் இருக்கும்.

Ply genesus monogynous

Ploy gamy Monogamy ஒரு தாய்ப்பிறப்பு ஒருவைத்தோற்றம் பலவைத்தோற்றம் என்று அவர்கள் சொன்னாலுங்கூட அதுவும் ஒருமுறை நடந்ததாகத் தான் கூறுவார்கள். அதிலே ஓர் ஒழுங்கு இருக்கிறது என்று தெரிகிறது. எல்லாம் சேர்ந்து ஒரு கண்ணறையிலிருந்து (cell) எல்லா உயிரினமும் சேர்ந்து மாந்தன் அல்லாத உயிரினங்களெல்லாம் சேர்த்து ஒரு கண்ணறையிலிருந்து தோன்றின என்று சொன்னால் அந்த 'செல்'லுக்கு எப்படி உயிர் உண்டானது என்று ஒரு கேள்வி எழத்தானே செய்யும்? ஆகையினாலே இறைவனுடைய ஆற்றல் உன்று சொல்வதினாலே - நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதனாலே பெரிய கேடில்லை. இப்பொழுது பாருங்கள் அமெரிக்காவாக இருக்கட்டும் நியூயார்க்காக இருக்கட்டும் இலண்டனாக இருக்கட்டும், உலகில் கல்வி நாகரிகம் பண்பாடு அறிவு ஒழுக்கம் எல்லாவற்றிற்கும் தலைசிறந்த இடங்கள் என்று சொல்லப்படுகின்றன; அங்கு ஒரு கால்மணி நேரத்திற்கு ஒரு நாளைக் குறிப்பிட்டு ஒரு கால்மணி நேரம் அதற்குள் அரசாட்சி நீக்கப்படும். அந்தக் கால்மணிநேரங்கூட எவன் என்ன வேண்டுமானாலும் அரசாட்சி செய்து கொள்ளலாம். தண்டனை இல்லை என்று மட்டும் ஆணை போடுவதாயிருந் தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அந்த இருபத்தைந்து கோள்களும் அதற்கு மேலுள்ள பல