உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

பாவாணர் உரைகள் நாள்களும் கதிரவன் என்ற சுடரும் எப்படி நாள்தோறும் இயங்கிவரு கின்றன, அதை அப்புறம் இயக்குகிறவன் ஒருவன் வேண்டும்? இல்லையா? அதற்கு என்ன உயிரா இருக்கிறது? ஞாலத்திற்கு உயிரில்லை. கதிரவனுக்கு உயிரில்லை. அது ஒரு பொருள் அவ்வளவுதான். எரிகின்ற பொருள். அதுவும் நம்முடைய விளக்கெல்லாம் அந்த எண்ணெய் இருக்கின்ற வரையில்தான் எரியும். அது எவ்வளவோ காலமாக எரிந்துகொண்டு வருகிறது. இன்னும் எரியப்போகிறது. ஆக இதற்கெல்லாம் -இயக்குகின்ற ஒரு தலைவன் இருக்கத்தான் செய்யும். எத்தனைக் கோடி மக்கள் இப்போது இருக்கிறார்கள். இத்தனைப் பேர் இங்கேயே நாம் எளிதாய் அடையாளம் கண்டுகொள் கிறோம். இந்த எழுபது கோடி மக்கள் – இன்னம் போகப் போகப் பெருகிக் கொண்டே போகிறது. அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா இல்லையா? இப்படியெல்லாம் இறைவனே ஓர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான். ஆகையினாலே சும்மா இரண்டொரு சான்றுகளைச் சொல்கிறேன். ஆகவே அடியோடு இந்த கடவுளே இல்லையென்று சொன்ன தார்வீனே பிற்காலத்தில் தவற்றை உணர்ந்து - இறுதிக் காலத்திவே வருந்தினதாக நான் சொன்ன அந்தப் பொத்தகத்திலே எழுதப் பட்டிருக்கிறது. அது உண்மையாக இருக்கலாம்.

ஆகவே மக்கள் பல திசைகளிலே பிரிந்து போனார்கள். இதிலே கொஞ்ச நாகரிக நிலையில் இவர்கள் -பாபிலோனியர்கள் பிரிந்து போனார்கள். அதனாலேதான் 'ஊர்' என்று அங்குப் போய்க் குடியேறினான். அப்பன் என்று பேர் கொண்ட ஆபிரகாம் அங்குப் போய்ச் சேர்ந்தான். அதற்கப்புறம் சேமிய மொழிகள் தோன்றின. பிறகு ஆரிய மொழிகள் தோன்றின. கிரேக்க இலத்தீன் ஐரோப்பிய நாகரிகம் அத்தனைக்கும் மூலம் பாபிலேனிய நாகரிகந்தான் என்று பாபிலோனிய வரலாற்றில் (Babylonia History) இருக்கிறது. பாபிலோனிய நகர வரலாற்றிலே சொல்லப் பட்டிருக்கிறது. ஆகையினாலே தமிழ் மிக மிக முந்தியது.

இருக்கு வேதந்தான் உலகத்திலேயே முதன் முதலாக எழுதப்பட்ட சான்றென்று மொழிச் சான்றென்று - சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இல்லவே இல்லை! தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டாலே போதும். தொல்காப்பியம் அவர்கள் எழுதினது அல்ல. எப்படிப் சொல்லதிகாரம் இருக்கிறதோ அதற்கு மேலே பொருளதிகாரமும் ஒன்று இருக்கிறது. அந்தப் பொருளதிகாரத்திலே செய்யுளும் அணியும் பிற மொழிகளுக்கும் பிற்காலத்திலே தனித் தனியாகத் தோன்றினவென்று நாம் ஒப்புக் கொண்டாலும் 'பொருள்' என்கிற இலக்கணமானது எல்லா மொழியிலும் இல்லாத ஒன்று. அது ஒன்றே போதும். தமிழரே உயர்ந்த நாகரித்தனர் என்று உயர்த்துவதற்கு.

எழுத்தாலே சொல் ஏற்படுகிறது. சொல்லாலே பொருள் ஏற்படுகிறது. அது சொல்லாலே சொற்றொடர் வரை நடையாக வழங்கினாலும் சரி. அணி சேர்ந்தாலும் சேரா விட்டாலும் அதற்குப் பொருள் இருக்கிறதல்லவா?