உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் இறுதிப் பேருரை

95

அந்தப் பொருளுக்கும் இலக்கணம் கண்டவன் தமிழன் ஒருவன்தான். அதிலே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், 'எல்லா அறிவியலும் இல்லை, போரும் காதலும்தான் இருக்கிறது வேறு என்ன இருக்கிறது? என்று. அறியார் அவர்கள். அந்த (போரின்) வாகையிலே எல்லாப் பொருள்களையும் அடக்குகிறார் அவர். தொல்காப்பியத்திலே இவர் சொல்லாதுவிட்ட உண்மையைப் பிற்காலத்திலே வந்த ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பா மாலையில் சொல்லியிருக்கிறார், அந்த வென்றி இந்த வென்றி என்று. தக்க வென்றி கோழிவென்றி யானை வென்றி இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். (குறிப்பு 10)

ஆகவே இந்த நால்வகுப்பாரையும் ஒவ்வொரு வகுப்பிலும் தலைவன் ஒரு சிறந்த தொழில் ஆற்ற வேண்டும் என்று ஒருவகையான நல்ல போட்டி இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக அந்த இலக்கணத்தை அமைத்து வைத்திருக்கின்றனர். அதையெல்லாம் ஆய்ந்து பார்ப்பதில்லை. அந்தத் தொல்காப்பியத்திலே சொல்லப்பட்டிருக்கிறது, எத்தனை வகையான இலக்கியம் இருந்தது பழையகாலத்திலே!

“பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,

அங்கதம், முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்'

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல். பாட்டு என்று சொல்கிறது என்னவென்றால் இப்பொழுது இருக்கின்ற பத்துப்பாட்டு எட்டுத்தொகை இருக்கின்றனவே அவையும். இந்த தொண்ணூற்று றுவகைப் பனுவல் (பிரபந்தம்) அத்தனையும் பாட்டு. (Genetal Poem)

உரை என்று சொல்கிறது எழுதப்படுகிற உரை விளக்கம் (வியாக்கியானம்) (commentary) உரையும் அந்தக் காலத்திலே செய்யுளாக இருந்தது. அது எப்படி இருக்கும்? அல்ல இராணி மாலை, பவளக்கொடி மாலை பார்த்திருக்கிறீர்களா? அந்த நடையில் இருக்கும். யாருக்கும் விளங்கும்? அப்படி இருந்தது அந்தக் காலத்திலே உரை.

பாட்டு, உரை, நூல்...... 'நூல்' என்று சொன்னது அந்தக் காலத்திலே அறிவியலைத்தன் (Science ஐத்தான்) இறைநூல், நாடகநூல், மருத்துவநூல், கணிய நூல் என்றால் சோதிடம் - இப்படிப்பட்ட அறிவியலுக்குத்தான் நூல் என்று பெயர் மதிவாணன் நாடகத் தமிழ்நூல் என்று இருக்கிறது.

'என்றார்நூலுள்ளும், 'நூலோர்' என்று திருவள்ளுவரும் வல இடங்களிலே குறிக்கின்றார். இப்போது நாம் என்ன செய்கிறோம். எல்லாவற்றையும் நூல் என்று வைத்து விட்டோம். நூல்நிலையம் என்ற ஒரு பொத்தக நிலையத்தை. Library என்றாலே - Libran என்றால் பொத்தகம் என்றுதான் பொருள் இலத்தீனிலே. அது பொத்தகசாலை என்றால்