உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

பாவாணர் உரைகள்

பொத்தகம் வைக்குமிடம் தான். அறிவியல் – Science - என்று தனியாக வைத்திருக்கிறார்கள். இங்கே நாம் நூல்நிலையம் என்றே சொல்லிக் காண்டிருக்கிறோம்.

இப்படி அந்தப் பாட்டு உரை நூலே வாய்மொழி... வாய்மொழி என்றால் மந்திரம். மந்திரம் என்ற சொல்லும் அந்தக்காலத்தில் வழங்கியது. முன்னுந்திறன் அதாவது Power of will மன்னுந்திறத்திலிருந்து வருகின்றது. “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவனியச் சார்பாகத் திருமந்திரம் இருக்கிறது. மாலியச் சார்பாகத் திருவாய்மொழி இருக்கிறது.

அந்த வாய்மொழி, மந்திரம் இரண்டும் அந்தக் காலத்திலேயே வழங்கிய தூய தமிழ்ச் சொற்கள், இந்த வகையான நூல்களும் இருந்தன.

பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே..... பிசி என்கிறது விடுகதை (Riddle) பொய் என்று பொருள். அது 'தட்டுக்கச்சேரியாக' வருவதினாலே பிசி என்று பெயர் வைத்து விட்டார்கள். சேலம் பக்கம் போவீர்களானால் "பொய் புடிக்கிறான், பொய் புடிக்கிறான்” என்று சொல்வார்கள். திருநெல்வேலி பக்கத்தில் கேட்டால், "புளுகுகிறான், (பொய்) புளுகுகிறான்” என்று சொல்வார்கள். பிசி என்ற சொல்லானது அந்த இடத்திலே பொய் என்ற கருத்திலே விடுகதையைக் குறிக்கிறது.

பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம் அங்கதம் என்று சொல்வது பிற்காலத்திலே அது ஓர் எதிர்நூல் (Satire) என்பது போல்தான். அந்தக் காலத்தில் அதுதான் இலக்கியத் திறனாய்வு (Literary Criticism)

பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம், முதுசொல்...... முதுசொல் என்றால் பழமொழி. பழமொழியைக் கூட அந்தக் காலத்திலே செய்யுள் என்று வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அது சொற்சுருக்க மாகவும் நல்ல மோனை மொழியோடு கூடியும் பொருள் பொதிதந்ததாகவும் இருக்கின்றதனாலே பழமொழியையும் அந்த இலக்கிவகையோடு சேர்த்தார்கள். ஒன்றாவது ஒன்றாவது உண்டோ உண்டோ இப்போது இப்போது நான்

சான்ன

எழுவகையிலே? ஆகையினாலே இப்பொழுது இருக்கிற தமிழ் இலக்கியம் முதல் இலக்கியமன்று என்பதை நீங்கள் உணர வேண்டும். தாள்புல் After- math என்கிற மறுகாய்ப்பு இது. பழைய இலக்கியம் அத்தனையும் அழிக்கப்பட்டு விட்டன. அந்தக் காலத்திலே. இந்தத் தமிழன்தன் பழைய இலக்கியம் இருக்கிறதாயிருந்தால் தமிழனுக்குப் பிற்காலத்தில் கண்திறக்கப் பட்டுவிடும் என்று ஒரு சாரார் அழித்தேவிட்டார்கள்.

ஒரு சிறுசெய்தி சொல்கிறேன். மலையாளத்தில் இருந்த அரசர்- மலையாள அரசர்-திருவாங்கூர் அரசர் இளமையிலே இங்கிலாந்திற்குச்