உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் இறுதிப் பேருரை

97

சென்றார். அவருடைய பத்மநாபசாமி கோவில் பூசகர் என்ன செய்தார்? போகக் கூடாதெனத் தடுத்தார். ஏனென்றால் அங்குப் போனால் கண்திறந்துவிடும். இவருக்கு அடிமையாகயிருக்கமுடியாது. இவர் சொல்கிறபடியெல்லாம் நடக்கமுடியாது. தடுத்தார். அவர் மீறிச் சென்று வந்துவிட்டார். வந்தவுடனே தீயை வைத்துவிட்டார்கள் அவ்வளவுதான். அவர்கள் அக்கினி வணக்கந்தான் தெரியுமே. ஏன் எப்படி தீ வந்தது என்று கேட்டார். “அது தெய்வத்திற்குப் பிடிக்கவில்லை. அரசர் அக்கரைக்குப் போய்விட்டதினாலே தெய்வத்திற்குச் சினம் உண்டாகி அதனாலே தீப்பற்றி எரிந்து விட்டது” என்றார். “அது உனக்கு எப்படித் தெரியும்?”

u“தெய்வமே வந்து எனக்குச் சொன்னது?”

வாசல் வழியாக

"அப்படியானால் நாளைக்கு நான் எந்த வாசல்

கோவிலுக்குள் போகிறேன். என்று சொல் பார்க்கலாம்?”

“நான் இப்போது சொல்லமாட்டேன். நாளைக்குச் சொல்கிறேன்.”

மறுநாள், சரி அப்படியே இருக்கட்டும் பார்ப்போம் என்று போனார். அவரும் மறுநாள் வழக்கமாகப் புகும் வாசல் வழியாக அல்லாது வேறு ஒரு வாசல் வழியாகப் போனார் அன்றைக்கு.

அங்கே போன உடனே கேட்டார் “என்ன? நான் எந்த வாசல் வழியாக வருகிறேன் என்று சொல்லவில்லையே?" என்று கேட்டார்.

"மேலே நிலைமேலே எடுத்துப்பார்”, “இந்த வாசல் வழியாகத்தான் வருகிறான்” என்று எழுதின சீட்டு வாசற்படியிலே செருகப்பட்டிருப்பதைக் காட்டினார். என்ன செய்தி தெரியுமா? நான்று பக்கத்து வாசலிலும் வைத்துவிட்டு அவர் வந்தவுடன் பையன்களைவிட்டு எடுக்கச் சொல்லி விட்டார். அவ்வளவு தான்! (அவையோர் வியப்பும் நகையும் கையொலியும் செய்கின்றனர்) இப்படி நடந்தது அது. இப்படி அவர்கள் துணிந்து செய்வார்கள்.

பாண்டித்துரைத் தேவர் நடத்தின தமிழ்ச் சங்கம் இருக்கிறதே தமிழகத்திலே நல்ல தமிழ்க் கழகம் (சங்கம்) - இது நல்ல தொண்டு செய்தது. இங்கேதான் நான் 1924இல் பண்டிதத் தேர்வு தேறினேன். இந்தத் தமிழ்ச் சங்கத்தில் அப்பொழுது வித்துவான் தேர்வெல்லாம் ஏற்படவில்லை. எனக்கு முன்னாலே திரு. வேங்கடசாமி நாட்டார் ஒருவர்தான் தேறியிருக் கிறார். அந்தத் தேர்வு மிகக் கடினமான தேர்வு. ஒருவரும் போவதில்ல. பிரவேச பண்டிதம் பால பண்டிதம் எழுதக்கூடப் போவதில்லை. இப்படி இருந்தது. கணக்கான ஏட்டுச் சுவடிகளையெல்லாம் சேர்த்துவைத்தார். ஒரு நாள் திடுமெனத் தீப்பட்டு ஆயிரக்கணக்கான ஏட்டுச்சுவடிகள் அரைமணி நேரத்திற்குள் எல்லாம் சாம்பலாயின. எப்படிப் போயிருக்கும்? அதைப் பாதுகாக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை. அந்த அளவுக்கு அவர்கள்