உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

பாவாணர் உரைகள்

இவைர்களை தமிழர்களை தமிழரசர்களை ஏமாற்றி அடிமைப்படுத் தினார்கள். பழைய காலத்திலேயே அடிமைப்படுத்திவிட்டார்கள்.

சிலப்பதிகாரத்திலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியப் படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் - அரசர்களுக்குள் மூவேந்தருமே பொதுவாக எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்கள்-அதிலே பாண்டியன் எவ்வளவு ஆற்றல் சிறந்தவன்! அவன் அந்த வார்த்திகனை - தட்சிணாமூர்த்தியுடைய தந்தை – அவர்கள் சேரநாட்டிலிருந்து வாங்கிக் கொண்டுவந்த அணிகலன் களைக் கண்டவுடன் இதோ புதையல் எறு சொல்லிச் சிறையிலிட்டான். அந்த அதிகாரிகள் அவர்கள் சட்டப்படி வழக்கப்படி தங்களுடைய பணியை - செயலைச் செய்து விட்டார்கள். உடனே அந்த (காளிகோயிற்) கதவும் சாத்தப் பட்டது. அதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு காளிபக்தியும் இருந்தது. அதன்பிறகு செய்தி சொல்லப்பட்டது. "அப்புறம் சரி அழைத்து வா” என்று சொல்லி - நயச்சொல் சொல்லி (நலக்குறைவால் ஐயா நாக்குழறியபடி பேச்சைத் தொடர்கிறார்கள்) நயம் செய்து கேட்டுக் கொண்டு ஏராளமான நகைகளைத் திருப்பியதும் அல்லாமல் - ஏராளமாக முற்றூட்டாகச் சில நிலங்களையெல்லாம் கொடுத்தார்கள் அப்படியிருந்தும் அவனுடைய மனை செய்தாள்?... (பாவாணர் ஐயா இழிவும் கழிவிரக்கமும் வாய்ந்து குறிப்பார்ந்த குரலோடு பேச்சைத் தொடர்ந்தார்கள்)....... கீழே விழுந்து வணங்கினான் என்றிருக்கிறது. நிலமகளுடைய சினத்தை-ஊடலைச் சிறிது தணித்தான் என்று மங்கல வழக்கிலே சொல்லப்பட்டு இருக்கிறது.

("கார்த்திரக கணவன் வார்த்திகள் முன்னர்

என்ன

இருநில மடந்தைக்கத் திருமார்பு நல்கி." சிலப்பதிகாரம்) (குறிப்பு).

(இப்போது அவையினர் கையொலி எழுப்பித் தொல்லை செய்தனர்.) அதை நீங்கள் அறிந்து பார்க்க வேண்டும். எந்த அளவுக்கு அரசர்கள் (குறிப்பு 11) அடிமைப் பட்டிருந்தார்கள் என்று. இதற்கெல்லாம் அந்த வெண்ணிறம் ஒன்றும் - அவர்களுடைய மூலமொழியின் வெடிப்பொலிகள் - அந்த மூச்சொலி (Voiced unaspirate pounds) கலக்காத போலி ஒலிகள்தாம். (மீண்டும் அவையிலிருந்து கையொலி எழுந்தது. பேட்டுபோருக்கு இடையூறாக வேறொன்றுமில்லை. இந்த ஒன்றைச் சொல்லிவிடுகின்றேன்.

குமரிநாட்டிலிருந்து பல்வேறு காலத்திலே பல்வேறு மொழி நிலையிலே, பல்வேறு திசையிலே மக்கள் பிரிந்து சென்றார்கள். அதிலே வடக்கே போனவர்கள் - முதலிலேயே ஒரு சாரார் போனார்கள். அந்த ஒரு சாரார்தான் பாசுக் (Bosque) மொழியைப் பேசுகிறவர்கள் 'பிரனிசு மவுண்டன்' (Pyreness Mountain) மலையிலே (குறிப்ப 12) அதை நான் முதலமைச்சருக்குச் சொல்லவிரும்புகிறேன். இதைப்பற்றி விரிவாகச்